ஒண்ணுமே செய்யல..ஹேக்கருக்கு 2 கோடி வழங்கிய கூகுள்: காரணம் இதுதான்.!

|

Google நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய சாதனங்களுக்கும், புதிய அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தரமான பிக்சல் போன்களை தயாரித்து வருகிறது என்பதும், இந்த போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இந்நிலையில் எந்த வேலையும் செய்யாத ஒரு ஹேக்கருக்கு கூகுள் நிறுவனம் 2 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளது. மேலும் இதற்கு பின்னால் உள்ள காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

 சாப்ட்வேர்

சாப்ட்வேர்

அதாவது இதுவரை கூகுள் நிறுவனம், சாப்ட்வேர்களில் ஏதாவது பிழைகள் இருக்கும் போது அதனை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு பெரும்சன்மானம் வழங்கும். இதேபோன்று பல நிறுவனங்கள் சாப்ட்வேர்களில் பிழைகள் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு பணம் வழங்கி உள்ளன.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

சைபர் செக்யூரிட்டி பொறியாளர்

சைபர் செக்யூரிட்டி பொறியாளர்

இப்படி இருக்கும் நிலையில், எந்த பிழைகளையும் கண்டுபிடிக்காத சைபர் செக்யூரிட்டி பொறியாளர் ஒருவருக்கு சுமார் 2,50,000 அமெரிக்க
டாலர்களை (இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்) கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

 2,49,999 டாலர்கள்

2,49,999 டாலர்கள்

மேலும் இது குறித்து சைபர் செக்யூரிட்டி பொறியாளர் சாம் கர்ரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மூன்று வாரங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் தனக்கு சுமார் 2,49,999 டாலர்களை அனுப்பியது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ரெட்மி நோட் 11டி ப்ரோ, ரெட்மி நோட் 11டி ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா

ஆனால் இந்த பணத்தை எதற்காக என் வங்கிக் கணக்கிற்கு அவர்கள் அனுப்பினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்பு இது பற்றி ஏதேனும் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி கூகுள் நிறுவனத்தையும் அவர் டேக் செய்திருந்தார்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீன்ஷாட்

குறிப்பாக கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பணம் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் சாம் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏதுவுமே செய்யாத ஹேக்கருக்கு கூகுள் நிறுவனம் பணம் அனுப்பியதால் இணையவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

கூகுள் நிறுவனம் சார்பில் விளக்கம்

கூகுள் நிறுவனம் சார்பில் விளக்கம்

இந்நிலையில் எதுவுமே செய்யாத சாம் கர்ரி வங்கி கணக்கிற்குப் பணம் எப்படி சென்றது என்பது பற்றி கூகுள் நிறுவனம் சார்பில் விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அதிகாரி ஒருவரின் தவறு காரணமாகப் பணம் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் எங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு வந்ததற்கு நன்றி எனவும் இதைச் சரி செய்ய என்ன வழி உள்ளது என்பதைப் பார்க்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

 செலவு செய்யவில்லை

செலவு செய்யவில்லை

முன்னணி நிறுவனத்தில் பாதுகாப்பு பொறியாளராக வேலை பார்க்கும் சாம் கர்ரி, கூகுள் உள்ளிட்ட பல மென்பொருள் நிறுவனங்களுக்கு பக் ஃபிக்சிங் செய்து அதற்கான வெகுமதியை பலமுறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் எந்த பிழையும் கண்டுபிடிக்காத போதும் தனக்கு வழங்கப்பட்ட 2 கோடி ரூபாயில் இருந்து ஒரு காசை கூட அவர் எடுத்து செலவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google mistakenly sends Rs 2 crore to hacker, what happened next: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X