Google அதிரடி அறிவிப்பு: இனி Google meet ப்ரீமியம் இல்ல இலவசம்., 100 பேர், 60 நிமிடம் பேசலாம்!

|

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் வீடியோ கால் பிரதானமாக உள்ளது. இதையடுத்து Google meet செயலி இனி ப்ரீமியல் இல்லை எனவும் இலவசமாக அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஊரடங்கின் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் பல்வேறு பள்ளிகளும் தங்களது மாணவர்களுக்கு வீடியோகால் மூலம் பாடத்தை தொடங்கியுள்ளனர்.

5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருட்டு

5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருட்டு

இந்த அனைத்து பயன்பாட்டுக்கும் ஜூம் ஆப் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல்வெளியானது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தன.

கூகுள் மீட் செயலி

கூகுள் மீட் செயலி

இந்த நிலையில் கூகுள் மீட் செயலியை பிரதானமாக்கும் நடவடிக்கையில் கூகுள் இறங்கியுள்ளது என்றே கூறலாம். இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், 100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், கல்வியாளர்கள் (Google Classroom) கூகுள் வகுப்பறையை பயன்படுத்துகின்றனர்.

மார்ச் மாத தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது

மார்ச் மாத தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது

இது மார்ச் மாத தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. குரோம் புக்ஸ்க்கான (Chromebooks) தேவை அதிகரித்துள்ளதைப் கண்டறிய முடிகிறது. மார்ச் இறுதி வாரத்தில் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான வீடியோ கால்

பாதுகாப்பான வீடியோ கால்

குறிப்பாக பள்ளிகளும், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களும், வணிகங்களும், தங்களின் பாதுகாப்பான வீடியோ கால்களை மேற்கொள்ள கூகுள் மீட் செயலியை பயன்படுத்துகின்றனர். சுமாராக 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீட் செயலியைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜியோ அதிரடி: திடீரென தினசரி 2ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு.!ஜியோ அதிரடி: திடீரென தினசரி 2ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு.!

பீரிமியம் வீடியோ காலிங் செயலி

பீரிமியம் வீடியோ காலிங் செயலி

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் அதன் பீரிமியம் வீடியோ காலிங் செயலியான கூகுள் மீட் ஆப்பை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பார்க்கையில், மீட் வீடியோ கான்ஃபெரன்சிங் செயலியின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இதில் இணைந்துள்ளனர்.எனவே, எதிர்வரும் வாரங்களில் இந்த செயலியை அனைவரும் இலவசமாக்க பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் க்வூட் இயக்குநர் சிமிதா ஹஷிமா

கூகுள் க்வூட் இயக்குநர் சிமிதா ஹஷிமா

இதுகுறித்து கூகுள் க்வூட் இயக்குநர் சிமிதா ஹஷிமா கூறுகையில், கூகுள் மீட் செயலி அனைவருக்கும் இலவசமாக்கப்பட உள்ளது. ஒரு கான்ஃபிரென்சில் 100 பேர் வரை பங்கேற்கலாம். 60 நிமிடங்கள் வரை மீட்டிங் செய்யலாம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இதனைச் செயலாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

source: livemint.com

Best Mobiles in India

English summary
Google meet video conferencing app is now free for all users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X