கூகுள் மீட்டில் வந்தது புத்தம் புதிய அம்சம்: என்ன தெரியுமா?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து தயாரிப்புகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இதன் கூகுள் மீட் சேவையை உலகம்
முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஐஒஎஸ் ஆகிய இரண்டு

தற்சமயம் இந்த கூகுள் மீட்டில் நாய்ஸ் கேன்சலெஷன் என்ற புதிய வசதி அம்சத்தை வெளியிடத் துவங்கியுள்ளது. எனவே இது
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு தளங்களுக்கும் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 மீட் ஆனது மீட்டிங்கின்

குறிப்பாக இந்த கூகுள் மீட் ஆனது மீட்டிங்கின் போது பின்னணியில் ஏற்படும் இரைச்சலை ரத்துசெய்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவான அழைப்புகளை வழங்குகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் கூகுள் மீட்டின் டெஸ்க்டாப் பதிப்பிற்கான நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி சூட்

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி சூட் வாடிக்கையாளர்களுக்கான நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் கடந்த ஆகஸ்ட் மாதம்அறிவிக்கப்பட்டது. பின்பு ஒரு வலைப்பதிவு இடுகையில் கூகுளின் GSuite குழு, மீட்டில் இயங்கும் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சமானது செயற்கை நுண்ணறிவால் என்றும் இந்த அம்சம் இப்போது அனைத்து ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது வந்துள்ள அம்சம்

சுருக்கமாக இப்போது வந்துள்ள அம்சம் என்னவென்றால், ஒரு கதவை மூடும் சத்தம்,நாய்கள் குறைப்பது, டைப் செய்யும் சத்தம், அருகிலுள்ள கட்டுமான தளத்திலிருந்து வரும் சத்தம் போன்ற சத்தங்களைத் தடுப்பதை கூகுள் நோக்கமாக கொண்டுள்ளது.

கிடைக்காது எனத் தகவல்

ஆனாலும் இந்த அம்சம் G Suite Basic, G Suite for Nonprofit Customers மற்றும் G Suite for Education
பயனர்களுக்கு அணுக கிடைக்காது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

யல்பாகவே ஆப் செய்து

பின்பு இந்த அம்சம் இயல்பாகவே ஆப் செய்து வைத்திருக்கப்படும்,அதை இயக்க நீங்கள் More => Settings சென்று, பின் Noise Cancellation அம்சத்தினை எனேபிள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!

 இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும்

கண்டிப்பாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் இந்த தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Meet Introduced Noise Cancellation Feature For Android, iOS: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X