Google Meet Features:ஜூம் செயலியை விடுங்க மக்களே Google Meet அறிமுகம் செய்கிறது கூகுள்.!

|

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம் பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஊழியர்கள் பலர் வீட்டில இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர்.

ஜூம் செயலியைப்

இந்நிலையில் ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல்வெளியானது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூம் செயலி
பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடுகளிலும் ஜூம்

ஜூம்செயலியை பயன்படுத்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. சிங்கப்பூரில், ஆசிரியர்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் ஜூம்
செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Jio, Airtel, Vodafone Idea அறிவித்த அதிரடி அறிவிப்பு! மே 3ம் தேதி வரை இந்த சேவை இலவசம்!Jio, Airtel, Vodafone Idea அறிவித்த அதிரடி அறிவிப்பு! மே 3ம் தேதி வரை இந்த சேவை இலவசம்!

வேலையில்

இந்நிலையில் ஜூம்செயலிக்கு மாற்று வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்த வேலையில் ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ்மீட்' (Hangouts Meet)செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும்வேலையில் இறங்கியிருக்கிறது கூகுள்.

ஹேங்அவுட்ஸ்

அதாவது ஹேங்அவுட்ஸ் என்ற பெயரை மாற்றி கூகுள் மீட் என்று பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் மாற்றிவருகிறது கூகுள் நிறுவனம். அதன்படி கடந்த மார்ச் மாதம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் மீட்டிங்கின் மொத்த கட்டுப்பாடும் ஆசரியர்கள் வசமே இருக்குமாறு ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. அதில் மாணவர்கள் மீட்டிங்களில் ஆடியோவை மியூட் செயய முடியாது, ஆசரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட மீட்டிங்கில் இருக்க முடியாது போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.

விரைவில் கூகுள்

தற்சமயம் கூகுளின் இந்த சேவையைப் பயனர்களிடம் கொண்டு சேர்க்க இதுதான் சரியான நேரம். அனைவரும் அதிகளவு
பயன்படுத்தி வந்த ஜூம்செயலி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதால், ஜூம்செயலி வழங்கி வந்த ஒருவசதியையும் விரைவில் கூகுள் மீட் செயலியில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

மீட்டில்அறிமுகப்படுத்தவிருப்பதாக

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஜூம்செயலியில் ஒரே நேரத்தில் மீட்டிங்கில் இருக்கும் பலரையும் ஒரே திரையில்
பார்க்க முடியும் ஆனால் தற்போதுள்ள கூகுள் மீட்டில் அந்த வசதி இல்லை. இம்மாத இறுதிக்குள் அந்த வசதியை மீட்டில்அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள்

கூகுள் மீட்டின் ப்ரீமியம் வெர்ஷனையும் ஜூலை 1 வரை கட்டணம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள். மேலும் ஜி-மெயிலின் சைட் பாரிலேயே வீடியோ மீட்டிங்கைத் தொடங்குவதற்கும், வேறு மீட்டிங்கில் இணைவதற்குமான வசதியையும் கொடுத்தவிருப்பதாக அதன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
Google Meet Introduce New Features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X