Home
News

இனி தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும்.. அதிரடி காட்டிய Google.. இதோ முழு விவரம்..

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழிநுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டே தான் இருக்கிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கூகுள் மீட்டில் (GOOGLE MEET) ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

கூகுள் மீட்

அதாவது கூகுள் மீட் தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும் Real Time Speech Translation அம்சத்தை தான் கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் நாம் தமிழில் பேசுவது நம் குரலிலேயே அவர்களுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுவிடும்.

இனி தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும்.. அதிரடி காட்டிய Google..

எனவே இதனால் அலுவலக மீட்டிங்கில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் தங்களின் ஐடியாக்களை எவ்வித சிரமமின்றி எந்த மொழியிலும் பேச முடியும். குறிப்பாக கூகுள் I/O 2025 நிகழ்வில் தான் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் நீங்கள் பேசியதை எதிர்புறம் இருப்பவர் விரும்பும் மொழியில் நேரடியாகக் குரலோடு மொழிபெயர்த்துத் தரும் என்பது தான் இதன் சிறப்பு.

அதேபோல் Real Time Speech Translation அம்சம் முதலில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்குள் அமல்படுத்தப்படுகிறது. விரைவில் ஜெர்மன், இத்தாலியன், போர்ச்சுகீசியம் மற்றும் பல மொழிகளுக்கு இந்த அம்சம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இந்த புதிய அம்சம் Google-ன் AI சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பேச, மொழி ஒரு தடையாக இருக்காது. குறிப்பாக உலக மக்கள் அனைவருக்கும் இந்த Real Time Speech Translation அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும்.

Veo 3

அதேபோல் கூகுள் I/O 2025 நிகழ்வில் பல ஏஐ அப்டேட்களுடன் வீடியோ உருவாக்கும் Veo 3-ஐ வெளியிட்டது கூகுள் நிறுவனம். அதாவது கூகுள் நிறுவனம் Veo 3 பெயரில் ஏஐ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது வீடியோ மற்றும் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை,சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றைத் தெளிவாகத் தயாரித்துக் கொடுக்கிறது.

மேலும் தற்போது இந்த 'Veo 3' Al தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தான் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதுவும் Veo 3 அறிமுகமானதும், சமூக ஊடக பயனர்கள் அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டா, எக்ஸ் மற்றும் யூடியூப்பில் பகிரத் தொடங்கினர்.

Veo 3 மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் நிஜ வீடியோகளைப் போலவே இருப்பதாகவும், வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக இது 100% தத்ரூபமாக இருப்பதாக இணைய வாசிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் வீடியோக்களை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த அப்டேட் இன்னும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்காவில் கூகுள் ஜெமினி செயலியில் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே Veo 3 கிடைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Meet can use AI to translate speech in real time: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X