ஆண்ட்ராய்டுக்கு goodbuy சொல்லுங்கள் மக்களே: வருகிறது ஃபியூஷியா.!

ஃபியூஷியா தோற்றம் சற்று வித்தியசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு சிறந்த பாதுகாப்பு மற்றும் எளிமையாகபயன்படுத்தும் விதமாக ஃபியூஷியா உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

|

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த இயங்குதளத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கூட மிக எளிமையாக பயன்படுத்துவார்கள். மேலும் மக்கள் ஸ்மார்ட்போனை எளிமையாக இயக்குவதற்கு இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெரிதும் உதவியது என்றுதான் கூறவேண்டும்.

ஆண்ட்ராய்டுக்கு goodbuy சொல்லுங்கள் மக்களே: வருகிறது ஃபியூஷியா.!

கடந்த 2008-ம் ஆண்டு தான் முதன்முதலில் ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு வெளயிடப்பட்டது, பின்பு ஓப்போன் சோர்ஸ் மென்பொருள்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது இந்த இயங்குதளம். ஆண்ட்ராய்டு வருவதற்குமுன்பு ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்கள் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம்:

குறிப்பாக ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன்ற இயங்குதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை
உருவாக்கியது. மேலும் பல மொபைல் நிறுவனங்கள் இந்த கூகுள் ஆண்ட்ராய்டு உடன் இணைந்து பல்வேறு ஸ்மாட்போன்களை
குறைந்த விலையில் விற்பனை செய்தது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் வருவதற்கு முன்பு மொபைல் போன்களின் விலை
சற்று உயர்வாக இருந்தது.

2பில்லியன் மக்கள்

2பில்லியன் மக்கள்

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்த அறிக்கையில் 2பில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தது. பின்பு இப்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடுததகட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது கூகுள்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இயங்குதளத்தை அடுததகட்டத்திற்கு கொண்டு செல்லவே ஃபியூஷியா(Fuchsia)-வை தற்சமயம் உருவாக்கியிருக்கிறது. மேலும் இந்த தகவல் உறுதிப்படுத்த முடியாத தகவலாக இருந்துவந்தது, ஆனால் ஃபியூஷியா கோட்-விதிமுறையை கூகுள்
நிறுவனம் இணையத்தில் பதிவேற்றம் செய்தது மூலமாக இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் ஃபியூஷியா பற்றி பல்வேறு செய்திகள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஃபியூஷியா

ஃபியூஷியா

ஆண்ட்ராய்டு இயங்குதளம் தற்சமயம் வரை ஸ்மார்ட்போன், டிவி, ஸ்பீக்கர மற்றும் ரோபோ போன்ற பல்வேறு சாதனங்களில்
பயன்படுத்தப் படுகிறது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களில் அருமையாக பயன்படுகிறது இந்த இயங்குதளம். மேலும் விரைவில் வரும் ஃபியூஷியா இப்போது இருக்கும் ஆண்ட்ராய்டு விட பல்வேறு திறமையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் குரல் மூலமாக இடப்படும் கட்டளைகளை மிக அருமையாக செயல்படுத்தும் இந்த ஃபியூஷியா.

 சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இந்த ஃபியூஷியா தோற்றம் சற்று வித்தியசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு சிறந்த பாதுகாப்பு மற்றும் எளிமையாக பயன்படுத்தும் விதமாக ஃபியூஷியா உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபியூஷியா தொடர்பான திட்ட வரைபடத்தில் தற்சமயம் வரையில் சுந்தர் பிச்சை கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் ஃபியூஷியா பற்றிய தகவலை விரைவில் கூகுள் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த இயங்குதளம் வந்தால் இன்னும் மூன்றும் ஆண்டுகளுக்கு பிறகுதான் உபயோகத்திற்குவரும் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

1.2 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை: அசத்தும் ஐஐஐடி பெங்களூர் மாணவர்.!

1.2 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை: அசத்தும் ஐஐஐடி பெங்களூர் மாணவர்.!

பெங்களூர் இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பிரெஸ்டிஜியஸ் ரெசிடன்ஸி ப்ரோக்ராம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ1.2கோடி சம்பளத்திற்கு தேர்வாகியுள்ளார். இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு உலகம் முழுக்க 50 பேரும், இந்தியாவில் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

22 வயதான ஆதித்யா பலிவால் என்ற அந்த மாணவர், 2013-18 வரை ஒருங்கிணைந்த எம்.டெக் 5 ஆண்டு படிப்பை பெங்களூர் ஐஐஐடியில் படித்து, நியூயார்க்-ல் பணியில் சேரவுள்ளார். ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) கூகுள் ரெசிடன்ஸி ப்ரோக்ராம் என்று அழைக்கப்படும் இந்த ஓராண்டுகால திட்டத்தில் சேர்ந்து, ஓராண்டிற்கு பின் முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ஆதித்யா.

ஆதித்யா

ஆதித்யா

கூகுளின் இந்த திட்டத்திற்கு ஆதித்யா தேர்வானது குறித்து ஐஐஐடி-பி நிறுவனத்தின் டீன் சந்திரகேசர் கூறுகையில், "ஐஐஐடி-பி-ல் உள்ள சிறந்த மாணவர்களில் ஒருவர் ஆதித்யா. இவர் கூகுளின் ரெசிடன்ஸி திட்டத்திற்கு 1.2கோடி சம்பளத்தில் தேர்வாகியுள்ளார்" என தெரிவித்துள்ளார். "கடந்த ஆண்டு கூகுளில் இன்டர்ன்சிப் செய்தேன். அக்காலகட்டத்தில் இந்த திட்டத்தை பற்றி சில குழுக்களின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், உடனடியாக பி.எச்டி செய்வேனா என தெரியவில்லை. இந்த திட்டம் ஆராய்ச்சிக்கும், தொழில்துறைக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி இது எனக்கு மிகவும் பிடித்த பிரிவான - செயற்கை நுண்ணறிவு" என்கிறார் ஆதித்யா.

 முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம்.

முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம்.

அவர் மேலும் கூறுகையில், " ஓராண்டுகால திட்டமான இதற்கு பிறகு, ஒருவர் இதை முடித்துக்கொண்டு பி.எச்டி படிக்கலாம், இத்திட்டத்தை தொடரலாம் அல்லது இதை முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் திட்டத்தை நீட்டிப்பு செய்வது அல்லது முழுநேர பணியாக மாற்றுவது நமது செயல்திறனை பொறுத்தது"என்கிறார்.

பெங்களூர் ஐஐஐடி

பெங்களூர் ஐஐஐடி

இத்திட்டத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நாங்கள் நவீன ஆராய்ச்சிகளில் பணியாற்றி,பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதி ஆச்சர்யமளிக்கும் முடிவுகளை பெறுவோம். இப்போது வரை நான் எந்த பிரிவில் பணியாற்றுவேன் என்பது தெரியவில்லை. ஆனாலும் உலகம் முழுக்க இருந்து வரும் பல்வேறு மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்" என பதிலளித்தார்.

மும்பையை சேர்ந்த ஆதித்யா 12ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை அங்கு முடித்த பின்பு, பெங்களூர் ஐஐஐடி யில் சேர்ந்துள்ளார். "சிறுவயது முதலே கணிணிகள் மீது ஆர்வமாக இருந்ததால், கணிணியில் எப்போதும் ஏதாவது வித்தியாசமாக செய்து பரிசோதனை செய்துகொண்டே இருப்பேன். எனவே கணிணிஅறிவியல் படிப்பது இயற்கையான முடிவாகவே இருந்தது"என்கிறார் ஆதித்யா.

 நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங்

நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங்

இவரை தவிர்த்து இந்தியாவில் இருந்து தேர்வான மற்ற நால்வரும், ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, ஐஐடி ரவுர்கி மற்றும் ஐஐடி ஹைதராபாத் மாணவர்கள் ஆவர். கூகுள் இத்திட்டத்தை 2015 முதல் செயல்படுத்திவருகிறது.

இத்திட்டத்தை பற்றி கூகுள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது, " தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், ஆய்வு குழுக்களின் வெவ்வேறு அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து, கூகுள் ப்ரைன் டீம், பர்செப்சன், நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங் அல்லது கூகுள் ஏஐ -ல் பணியமர்த்தப்படுவார்கள்".

 ப்ரோகிராம்மிங் போட்டி

ப்ரோகிராம்மிங் போட்டி

ஆதித்யாவின் பேராசிரியர் முரளிதரா கூறுகையில், "ஆதித்யா நன்றாக கோடிங் செய்பவர் மற்றும் மிகச்சிறந்த மாணவர். உலக ஏசிஎம் ஐசிபிசி-ல் 2 முறை பங்கேற்றுள்ளார். இது உலகளாவிய மதிப்புமிக்க ப்ரோகிராம்மிங் போட்டி. ஒவ்வொரு ஆண்டும் நாடுமுழுவதிலும் இருந்து சில குழுக்களே பங்குபெறும். அதில் இவர் இறுதி சுற்று வரை சென்றுள்ளார்" எனக் கூறினார்.

நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

18 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சற்று யோசித்து பார்த்தல் ஸ்கூல் பரீட்சைக்கு பயந்து பயந்து படித்துக்கொண்டோ அல்லது ஹோம் வர்க் எழுதிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் சென்னையை சேர்ந்த 18 வயதே நிரம்பிய சாய் கிரண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விருது ஒன்றை தனதாக்கி கொண்டுள்ளார்.

இதுவே பெரிய சுவாரசியமாக தகவலாக இருக்கின்ற பட்சத்தில், அப்படி சாய் கிரண் என்ன செய்தார்.? எதற்காக சாய் கிரானுக்கு நாசா விருது வழங்கியது.? - என்ற தகவல் உங்களின் சுவாரசியத்தை மேலும் கூட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.!

கற்பனை

நிலாசோறு சாப்பிட்ட நம் அனைவருக்குமே விண்வெளி மீது தனி ஆர்வம் உண்டு, விண்வெளிக்குள் பறந்தால் எப்படி இருக்கும்.? மிதந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு பொழுதாவது கற்பனை செய்து பார்க்காத மனிதனே இருக்க வாய்ப்பில்லை. சாய் கிரணும் அப்படியான மனிதர்களுள் ஒருவன் தான்.!

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

18 வயது நிரம்பிய சாய் கிரண் பி, சமீபத்தில் நாசா அமெஸ் விண்வெளி தீர்வு 2017 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார். என்ன போட்டி.? அவர் அளித்த தீர்வு என்னவென்று தெரியுமா.??

மனித இனம்

மனித இனம்

நிலவிற்கு சென்று மனிதன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும், அப்படியாக பூமியில் இருந்து நிலவிற்கு எப்படியெலலாம் மனித இனம் செல்லலாம்.? என்ற கேள்விக்கு, பூமியில் இருந்து நிலவிற்கு எலிவேட்டர் (அதாவது மின்தூக்கி) ஒன்று உருவாக்கி அதன் வழியாக நிலவுக்கு செல்லலாம் என்று ஒரு அற்புதமான தீர்வை சாய் கிரண் முன்மொழிந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Google may put its Fuchsia OS on smart home devices within three years:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X