பட்ஜெட் விலையில் புதிய Pixel பட்ஸ்.. Google ஒரு முடிவோடுதான் இருக்கு போல.. எப்போது அறிமுகமாகும்?
கூகுள் (Google) தனது பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற 2025 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் போன்களுடன் சேர்த்து சில இன்னும் சில புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல்கள் கிடைத்துள்ளது
அதென்ன தயாரிப்புகள்? டிப்ஸ்டர் ஆர்சீன் லூபினின் (@MysteryLupin) எக்ஸ் பதிவுகளின்படி, கூகுள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஒரு TWS இயர்போன்ஸ் உட்பட பல புதிய ஆக்சஸெரீஸ்களை அறிமுகப்படுத்தக்கூடும். அவருடைய ஒரு பதிவின்படி - புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ ஆனது ஃபாக் லைட், ஹேசல், ஐரிஸ் மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய கலர்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த TWS இயர்போன்ஸ் ஆனது கடந்த ஜூன் 2021 இல் அறிமுகமான பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸை தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. இதுதவிர்த்து கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடல் வேறு எந்த விவரங்களும் இல்லை. ஆனால் இந்த மாடல் - இந்தியாவில் இப்போது ரூ.22,900 க்கு விற்பனை செய்யப்படும் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே டிப்ஸ்டர் மற்றொரு எக்ஸ் தள பதிவில், கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 ஆனது புதிய ஸ்டெர்லிங் கலர் ஆப்ஷனை பெறலாம் என்றும், இது கிரே நிற ஷேடில் இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். நினைவூட்டும் வண்ணம் தற்போது இந்த TWS இயர்போன்ஸ் ஆனது ஹேசல், பியோனி மற்றும் போச்செலின் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கின்றன.

கூகுள் பிக்சல் சார்ஜர் ஆனது ராக் கேண்டி என்கிற புதிய கலரில் கிடைக்கக்கூடும் என்று டிப்ஸ்டரின் மற்றொரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம், அதன் பிக்சல் வயர்லெஸ் சார்ஜரையும் அறிமுகப்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார். வயர்லெஸ் சார்ஜர் குறித்த விவரங்கள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை, ஆனால் இது கூகுள் பிக்சல் ஸ்டாண்டின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆக இருக்கலாம்.
பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக, இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிக்சல் 10 சீரீஸின் 2 டாப்-எண்ட் ஃபிளாக்ஷிப் மாடல்கள் ஆன பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro) மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது
அதன்படி பிக்சல் 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல்கள் முறையே 6.3 இன்ச் மற்றும் 6.8 இன்ச் டிஸ்பிளேக்களை பெறலாம். இந்த டிஸ்பிளேக்கள் 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் வரும். மேலும் இந்த டிஸ்பிளேக்கள் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறும்.
பிக்சல் 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இரண்டுமே 16 ஜிபி ரேம் கொண்ட டென்சர் ஜி5 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மாடலில் 128ஜிபி தொடங்கி 1 டிபி வரை ஆப்ஷன்கள் இருக்கலாம். ஆனால் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் பேஸிக் வேரியண்ட் 256ஜிபி ஆக இருக்கும், இதுவும் 1டிபி வரை செல்லலாம்.
கேமராக்களை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 48 மெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தல் 42 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 10 ப்ரோ மாடலில் 4870mAh பேட்டரியும், பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 5,200mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








