Home
News

சத்தமின்றி Gmail சேவையில் புதிய அம்சத்தைக் கொண்டுவரும் கூகுள்.. உற்சாகத்தில் பயனர்கள்..

கூகுள் (google) நிறுவனம் அவ்வப்போது ஜிமெயில் (Gmai) சேவையில் பல்வேறு புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக ஜிமெயில் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஜிமெயில் சேவையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் ஒன்று கிடைக்க உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஜிமெயில் அப்டேட்

அதாவது கூகுள் நிறுவனம் பயனர்களுக்குப் பழைய ஜிமெயில் யூசர்நேமை மாற்றிக் கொள்ளும் வசதியை சோதனை அடிப்படையில் உருவாக்கி வருகிறது. குறிப்பாக இதன் மூலம் புதிய கூகுள் கணக்கு உருவாக்காமல் அதே கணக்கில் புதிய ஜிமெயில் முகவரியைத் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக சிறிய வயதில் உருவாக்கிய மெயில் ஐடியை இப்போது மாற்ற நினைக்கும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

சத்ததமின்றி Gmail சேவையில் புதிய அம்சத்தை கொண்டுவரும் கூகுள்..

குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆனது @gmail.com என முடிவடையும் மெயில் முகவரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கூகுள் கணக்கில் பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி புதிய ஜிமெயில் யூசர்நேமை தேர்வு செய்யலாம், ஆனால் இந்த மாற்றத்தினால் Google Drive, Photos, YouTube, Play Store போன்ற போன்ற சேவைகளில் உள்ள டேட்டா, வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

மேலும் பழைய மெயில் ஐடி, ரிகவரி மெயிலாக சேமிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு அம்சமும் இருக்கும். அதேசமயம் இந்த புதிய வசதி அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது. கூகுள் நிறுவனம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

பயனர்கள் கூகுள் அக்கவுண்ட் செட்டிங்ஸ்-ல் Personal info மற்றும் Email பகுதியில் இந்த ஆப்ஷன் உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். நீங்கள் ஒருமுறை யூசர்நேம் மாற்றம் செய்த பிறகு, பழைய ஜிமெயில் ஐடி மற்றும் புதிய ஜிமெயில் ஐடிக்கும் வரும் மெயில்கள் ஒரே இன்பாக்ஸிலேயே கிடைக்கும். மேலும், லாகின் செய்யும்போது இரு மெயில் முகவரிகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதாவது ஒரு முறை ஜிமெயில் யூசர்நேம் மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் பழைய ஐடிக்கு மீண்டும் திரும்பும் வசதியும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் ஒரு கூகுள் கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே யூசர்நேம் மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே கணக்கில் காலப்போக்கில் 4 ஜிமெயில் முகவரிகள் வரை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் கூட சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சத்ததமின்றி Gmail சேவையில் புதிய அம்சத்தை கொண்டுவரும் கூகுள்..

கூகுள் மேப்ஸ் அம்சங்கள்

அதாவது கூகுள் மேப்ஸ் செயலி ஆனது தற்போது ஜெமினி AI-யை நேரடியாக ஒருங்கிணைப்பதால், இனி பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபடலாம். அதாவது போனை தொடாமல் ஜெமினி உடன் கூடிய கூகுள் மேப்ஸ் செயலியில் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்கள் வழங்குகிறது. இந்த அப்டேட் நாம் செல்லும் இடங்களுக்கு தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google may allow Gmail usernames to be fixed. Heres how the change will work.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X