கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

|

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை அலைகழித்துவருகிறது என்று தான் கூறவேண்டும். பல மாநிலங்களில் சுடுகாடுகள், இடுகாடுகளில் பிணங்கள் வரிசையில் காத்திருக்கின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றுக்கு

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்

இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டும் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் கொண்டுவந்துள்ளது.. இந்த அப்டேட் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!

கூகுள் நிறுவனம்

குறிப்பாக பாதிப்பை பெருமளவு குறைக்க தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் இந்த கூகுள் நிறுவனம் தடுப்பூசி பற்றிய தகவல்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கியது.

கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடு

இப்போது கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. மேலும் முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, பிரானஸ், சிலி, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த கூகுள் அப்டேட் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுலயும் நாங்கதான்: கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் களமிறக்கிய boAT- அதில் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம்!இதுலயும் நாங்கதான்: கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் களமிறக்கிய boAT- அதில் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம்!

மாநில அரசு பல கட்டுபாடுகளை விதித்திருந்தாலும்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு பல கட்டுபாடுகளை விதித்திருந்தாலும் பாதிப்புகளிகள் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இன்னும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கை அமல் படுத்துவது, வார இறுதி நாள்களில் ஊரடங்கை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Google Maps will now show nearby Govt-19 vaccination centers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X