அடடே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கூகுள் மேப்ஸில் புதிய மாற்றம்.. இனிமேல் அந்த ஆப்ஷன் இருக்காது.. ஏன்?
இந்தியா முழுவதும் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் முன்பின் தெரியாத இடத்திற்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது கூகுள் மேப்ஸ்.
அதாவது முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் நாம் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம்,எந்த வழியாகச் செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாகத் தெளிவுபடுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியைத் தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும். இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு முக்கியமான மாற்றத்தை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

அதன்படி கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க மற்றொரு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் பயனர்களின் லொக்கேஷன் டேட்டாவை கையாள்வதில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. தற்போது வரை கூகுள் மேப்ஸ் பயனர்களின் லொக்கேஷன் ஹிஸ்டரியை (location history) அதன் சர்வரில் ஸ்டோர் செய்து வருகிறது கூகுள் நிறுவனம்.
ஆனால் கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் புதிய அம்சம் மூலம் பயனர்கள் லொக்கேஷன் ஹிஸ்டரி கூகுள் சர்வரில் சேமிக்கப்படாமல் அவர்களின் மொபைல் போனில் மட்டும் ஸ்டோர் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது கூகுள்.

இதுதவிர கூகுள் மேப்ஸில் லொக்கேஷன் ஹிஸ்டரி என்ற பெயர் மாற்றப்பட்டு டைம்லைன் (Timeline) என்ற வசதி இடம்பெறும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் 1-க்குள் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள், எந்தெந்த இடம் செல்லத் தேடினீர்கள் போன்ற அனைத்து தகவலும் உங்களது போனில் மட்டுமே சேமிக்கப்படும். பின்பு உங்களது டேட்டாவை மேலும் பாதுகாக்க டைம்லைன் வசதி என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் வழங்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் விரைவில் உலகம் முழுவதும் அமைந்திருக்கும் EV சார்ஜிங் ஸ்டேஷன்களை கூகுள் மேப்ஸ் தளத்தில் டிஸ்ப்ளே செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதாவது நீங்கள் நீண்ட தூரம் பயணம் செல்லும் போது அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை இதில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் வரும் இந்த அம்சம் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (AI) மூலமாக இயங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் கஸ்டமர்கள் வழங்கிய ரிவ்யூக்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷனை சென்று அடைவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் போன்றவற்றையும் இந்த அம்சம் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் தளத்தில் வெளிவரும் இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








