Home
News

கூகுள் மேப்ஸில் வரும் புதிய வசதி.. இனி ஆதார் மையம் தேடி அலைய வேண்டாம்.. ஏன்? இதோ முழு விவரம்..

கூகுள் மேப்ஸில் (Google Maps) அவ்வப்போது புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு வசதிகளும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. இந்நிலையில் நாட்டில் எங்கெல்லாம் ஆதார் சேவை மையங்கள் (Aadhaar Centres) உள்ளன என்பதைத் துல்லியமாகக் காட்டும் வகையில், கூகுள் மேப்ஸில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காகக் கூகுள் நிறுவனம் தற்போது மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கூகுள் மேப்ஸில் ஆதார் மையம்
அதாவது நாட்டில் எங்கெல்லாம் ஆதார் சேவை மையங்கள் உள்ளன என்பதைக் கூகுள் மேப்ஸில் மிக எளிதாக கண்டறிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் மையங்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

கூகுள் மேப்ஸில் வரும் புதிய வசதி.. இனி ஆதார் மையம் தேடி அலைய வேண்டாம்!

மேலும் கூகுள் மேப்ஸ் மூலம் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையங்களை எளிதாகக் கண்டறியவும், அவற்றின் இருப்பிடம் மற்றும் தினசரி செயல்படும் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும் இந்த புதிய வசதி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆதார் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தினசரி டோக்கன் முறையில் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆகையால் கூகுள் மேப்பில் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களைக் கண்டறிந்து, முன்கூட்டியே டோக்கன் பெற்று, தேவையான ஆதார் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய மின்னணுவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் பதிவு, பெயர், முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றைத் திருத்துதல் போன்ற பல சேவைகள் ஆதார் மையங்களில் கிடைக்கின்றன. இதில் புதிய ஆதார் கார்டை பதிவு செய்ய கட்டணம் கிடையாது. பெயரளவு திருத்தங்களை மேற்கொள்ள ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணமின்றியும், 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.125 கட்டணத்திலும் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்களைப் பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ் முக்கிய அம்சங்கள்
வாகன ஓட்டுநர்களுக்காக புதிய வசதி: இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கி உள்ளது. அதுவும் பயனாளர்கள் தங்களது வாகனத்தைக் காட்ட கிளாசிக் பைக், ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற வடிவங்களில் எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9 இந்திய மொழிகளில் வழிகாட்டும் குரல் வசதியும் வழங்கப்படும்.

போக்குவரத்து தடைகள்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்கள் வழங்குகிறது. இந்த அப்டேட் நாம் செல்லும் இடங்களுக்குத் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

கூகுள் மேப்ஸில் வரும் புதிய வசதி.. இனி ஆதார் மையம் தேடி அலைய வேண்டாம்!

மெட்ரோ ரயில் டிக்கெட்: தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வசதி மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் மேப்ஸ் ஆனது இப்போது சிக்னல்கள் மற்றும் ஸ்டாப் சைன்கள், அருகிலுள்ள உணவகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் பிரபலமான கட்டிடங்கள் போன்ற லேண்ட்மார்க்குகளை (Landmarks) அடையாளம் காட்டும். அதுவும் உங்கள் பயணப் பாதையில் உள்ள இடங்களைத் தேடுவது, மின்சார வாகன (EV) சார்ஜர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, அல்லது ஆண்ட்ராய்டில் உங்கள் வருகை நேரத்தை (ETA) நண்பர்களுடன் பகிர்வது இன்னும் எளிதாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps to Soon Help Users Find Nearest Aadhaar Centres: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X