Home
News

அப்படி போடு.. இங்க கூட வழிகாட்ட நாங்க ரெடி.. என்ட்ரன்ஸ் டூ பில்டிங்.. கூகுள் மேப்ஸ் அசத்தல் வசதி.!

கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேசமயம் மற்ற நிறுவனங்களை விட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரக் கூகுள் நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் செயலியை இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்துகின்றனர். முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். அதேபோல் இந்த செயலியில் தொடர்ந்து பயனுள்ள வகையில் பல புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

இங்க கூட வழிகாட்ட நாங்க ரெடி.. கூகுள் மேப்ஸ் அசத்தல் வசதி.!

முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாகச் செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுபடுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப்ஸ் செயலியைத் தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும்.

நமது அன்றாடப் பயன்பாட்டில் இந்த கூகுள் மேப்ஸ் தவிர்க்கவே முடியாது. அதாவது எந்த இடத்திற்குச் செல்வதாக இருந்தாலும், அதன் தொலைவு எவ்வளவு, எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுவதோடு, அடுத்து வரும் வலப்புறம் சாலையில் திரும்புங்கள், அல்லது இடது பக்கச் சாலையில் திரும்புங்கள் என்று நமக்கு டிஜிட்டல் வழிகாட்டியாக இருக்கிறது இந்த கூகுள் மேப்.

குறிப்பாக கூகுள் நிறுவனம் அவ்வப்போது கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஒரு வளாகத்தின் நுழைவு வாயில் முதல் நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் வரை (entrances to buildings) துல்லியமாக வழிகாட்டும் வகையில் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த வசதி மூலம் கட்டிடத்தை நீங்கள் செலக்ட் செய்யும் போது மேப்ஸ் ஜூம் செய்யப்பட்டுக் காண்பிக்கப்படும்.

இங்க கூட வழிகாட்ட நாங்க ரெடி.. கூகுள் மேப்ஸ் அசத்தல் வசதி.!

அதன்பின்பு நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் மேப்ஸ் பக்கத்தில் ரெட் நிறத்தில் காண்பிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய அம்சம் பெரிய கட்டிடங்கள் உள்ள இடம், காலேஜ் கட்டிடம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

அதேபோல் இந்த புதிய அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது இந்த அம்சத்தின் முழு பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். இதேபோல் விரைவில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps testing entry and exit icons on large buildings: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X