Google தலைவா யூ ஆர் கிரேட்... கிராமங்களுக்கு வரத்தொடங்கியது கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ..!
முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். அதேபோல் இந்த கூகுள் மேப் செயலியில் தொடர்ந்து பயனுள்ள வகையில் பல புதிய புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். எனவே தான் இதை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியை தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும்.

அதேபோல் இந்த கூகுள் செயலியில் ஏற்கனவே ஸ்ட்ரீட் வியூ எனும் அம்சம் வெளிவந்தது. குறிப்பாக இதன் மூலம் பயனர்கள் பயணிக்கத் திட்டமிடும் பகுதிகளை 360 டிகிரி பார்வையில் ஆராயலாம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் 2016-ம் ஆண்டு இந்த வீதிக் காட்சி (ஸ்ட்ரீட் வியூ) தடை செய்யப்பட்டது.
வீதிக்காட்சியில் இருக்கும் பேனோரமிக் புகைப்படத்தில் தனிநபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றதால், இது தனியுரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்து தடை விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஸ்ட்ரீட் வியூ வசதிக்குக் கடந்த ஆண்டு மீண்டும் அனுமதி கிடைத்தது.
குறிப்பாக இந்தியாவில் இந்த ஸ்ட்ரீட் வியூ எனும் வீதி காட்சிகளை முதலில் பெங்களூரில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஜெனிசஸ் இண்டர்நேஷனல் மற்றும் டெக் மஹிந்திராவுடன் இணைந்து ஸ்ட்ரீட் வியூவை கொண்டு வந்துள்ளனர். ஆனால் தற்போதைய புகைப்படங்களில் தனிநபர்களின் முகங்கள், அடையாளங்கள் மறைக்கப்பட்டு அவர்களின் பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.

தற்போது வந்த தகவலின்படி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள், கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களும் 360 டிகிரி கேமராக்கள் மூலம் படமெடுக்கப்பட்டுப் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே இந்த வசதி பெரும்பாலான இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் கிடைக்கிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த வசதி கிடைக்க இன்னும் சில காலங்கள் ஆகும்.
இந்த ஸ்ட்ரீட் வியூ வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் கூகுள் மேப்ஸ் ஆப் மூலமாகவும் கூகுள் மேப்ஸ் இணையதளத்திலும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வசதியின் மூலம் இந்தியாவின் அடையாளச் சின்னங்கள், இயற்கை அதிசயங்கள், அருங்காட்சியகங்கள், அரங்கங்கள், உணவகங்கள், முக்கிய வீதிகள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் அனுபவிக்க முடியும்.

அதேபோல் வரும்காலங்களில் கூகுள் மேப்பில் 3டி வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த கூகுள் மேப் செயலியில் வரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Source: indiatoday.in
photo courtesy: indiatoday.in, google maps, google


Click it and Unblock the Notifications








