கடலுக்கு அடியில் இப்படியொரு தீவு இருக்குமா? கூகுள் மேப்ஸ் காட்டிய புகைப்படம்.! எங்கு தெரியுமா?

|

கூகுள் மேப்ஸ் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை சேரத்த வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். அதேபோல் ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

கேரள மாநிலம் கொச்சி அருகே

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு சின்ன தீவு இருப்பதுபோல் கூகுள் மேப்பின் சேட்டிலைட்போட்டோவில் தென்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சுமார் 7 கிலோமீட்டர்

அதாவது கேரளாவில் உள்ள கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு சின்ன தீவுஇருப்பது கூகுள் மேப்பில் தென்பட்டுள்ளது. குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் இந்த தீவு பார்ப்பதற்கு பீன்ஸ் போன்றவடிவில் உள்ளது.

இனி சிவப்பு இல்ல பச்சை: பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?இனி சிவப்பு இல்ல பச்சை: பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

கிட்டத்தட்ட மேற்கு கொச்சியின் 50 சதவிகித நிலப்பரப்புக்கு சம

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், 8 கிலோமீட்டர் நீளமும், 3.5 கிலோமீட்டர் அகலமும் கொண்டுள்ள இந்த தீவு,கிட்டத்தட்ட மேற்கு கொச்சியின் 50 சதவிகித நிலப்பரப்புக்கு சமம் என்று கூறப்படுகிறது.

லனம் கர்ஷிகா சுற்றுலா

தற்போது இது செல்லனம் கர்ஷிகா சுற்றுலா மேம்பாட்டு கழகம் என்ற சங்கத்தின் மூலம் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைகழகத்தின் பார்வைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்நது அந்த பல்கலைக்கழக வல்லுனர்கள் ஒரு தனிக் குழு அமைத்து, இது தொடர்பாக ஆய்வுசெய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!மாணவர்கள் கவனத்திற்கு: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

தெரியவந்துள்ள இந்த தீவு

கூகுள் மேப்ஸ் மூலம் தெரியவந்துள்ள இந்த தீவு ஆனது கடலுக்குள் மூழ்கி இருக்கும் கட்டட அமைப்பாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் எதுவாக இருந்தாலும் ஆய்வின் முடிவிலேயே தெரியவரும் என்று வல்லுநர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 கூகுள் மேப்ஸ் வசதியில் பல்வேறு

அதேபோல் கூகுள் மேப்ஸ் வசதியில் பல்வேறு புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூகுள் தனது வரைபட எடிட்டிங் அம்சத்தை புதுப்பித்து வருவதாகவும், புதிய அல்லது காண்பிக்கப்படாமல் இருக்கும் பழைய சாலைகளை சேர்க்கவும், தேவை இருக்கும் பட்சத்தில் வழிகளை மாற்றி அமைக்கவும் பயனர்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எல்லாமே வீட்டில் இருந்து- புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம், பெயர் இணைப்பு, நீக்கம் செய்வது எப்படி?எல்லாமே வீட்டில் இருந்து- புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம், பெயர் இணைப்பு, நீக்கம் செய்வது எப்படி?

 அம்சமானது வரும் காலக்கட்டங்களில் 80 நாடுகளில் வெளிவரும் என

இந்த அம்சமானது வரும் காலக்கட்டங்களில் 80 நாடுகளில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் வரைபடத்தில் சாலைகளை எவ்வாறு புதுப்பிப்பது, திருத்துவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். கூகுள் மேப் சேவை ஓபன் செய்ய வேண்டும். அதில் மெனு பட்டனை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும். பின் அதன் கீழ் பகுதியில் எடிட் மேப் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். எடிட் மேப் தேர்வை கிளிக் செய்த பிறகு காணாமல் போன சாலை என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். மேப் கிளிக் செய்து சாலை இணைப்பு தேர்வை தேர்ந்தெடுத்து சப்மிட் செய்ய வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Maps showing that there is a new island under the sea in Kochi: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X