Home
News

Google Maps யூஸ் செய்கிறீர்களா? உயிரை கையில பிடிச்சுக்கோங்க.. குறிப்பாக இதை செய்யாதீங்க.. ரொம்ப கவனம் தேவை..

கூகுள் (Google) நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் மேப்ஸ் மொபைல் பயன்பாட்டை (Google Maps mobile apps) உலகளவில் சுமார் 2 பில்லியன் மக்களுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகிறார்கள். கூகுள் மேப்ஸ் பயன்பாடு ஜிபிஎஸ் (GPS) மூலம் இடத்தின் தகவல்களை மிகவும் துல்லியமாக நமக்கு வழங்குகிறது. இருப்பினும் கூகுள் மேப்ஸ் சில நேரங்களில் மாற்று பாதை வழிகளை (Google maps alternative routes) பல பயனர்களுக்கு காண்பிக்கிறது. இதனால், கூகுள் மேப்ஸ் பயனர்கள் பல விதமாக சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

இதுபோல, இதற்கு முன்பு வரை பல விதமான வினோத நிகழ்வுகள் பதிவாகியுள்ளதை நாம் கண்டிருக்கிறோம். இதுவரை உயிர் சேதம் இல்லாத விபத்துகள் (accidents) நடந்தேறியது. ஆனால், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலையப் பகுதியில், கூகுள் மேப்ஸ் காண்பித்த மாற்று வழியில் பயணித்த மூன்று நபரின் உயிரை காவு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Maps யூஸ் செய்கிறீர்களா? உயிரை கையில பிடிச்சுக்கோங்க..

Google Maps யூஸ் செய்கிறீர்களா? உயிரை கையில பிடிச்சுக்கோங்க:

சரியான கூகுள் மேப்ஸ் மேம்படுத்தல் இல்லாமல் (no proper Google Maps update), காலாவதியான கூகுள் மேப்ஸ் ஜிபிஎஸ் (GPS location) தகவலை பயன்படுத்திய காரணத்தினால், கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தில் (under-construction bridge) செல்லும்படி கூகுள் மேப்ஸ் அவர்களை வலியுறுத்தியுள்ளது. பாலம் பாதியில் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியாமல், வேகமாக சென்ற கார் (car) நடுப்பாலத்தில் இருந்து நேரடியாக கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாக பறிப்போனது.

இந்த அசம்பாவிதம் அணைத்து கூகுள் மேப்ஸ் பயனர்களின் (Google Maps users) பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தும் போது நீங்கள் எச்சரிக்கையாக (caution) இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. இனி கூகுள் மேப்ஸ் பயனர்கள் அலட்சியமாக, முழுமையாக கூகுள் மேப்ஸ் தகவலை மட்டும் நம்பி வேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் (drive slow while using google maps) என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Google Maps கருவியை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்துவது?

இருப்பினும், நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கட்டாயம் கூகுள் மேப்ஸ் உதவியை நாட வேண்டியதுள்ளது. அப்படி இனி கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் பொழுது, நாம் எப்படி பாதுகாப்பாக கூகுள் மேப்ஸை பயன்படுத்தலாம் (how to use Google Maps safely) என்பது குறித்த தெளிவான தகவலை தான் இங்கு தெரிந்துகொள்ளப் போகிறோம். கீழ் வரும் விஷயங்களை சரியாக நீங்கள் பின்பற்றி கவனித்துக்கொண்டால், கூகுள் மேப்ஸ் கருவியை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

1. கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை எப்போதும் சரியான அப்டேட் (Google Maps update) உடன் இயக்கவும்.
2. சரியான அப்டேட் இல்லாத மற்றும் காலாவதியான பழைய வெர்ஷன் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை (Google Maps app) பயன்படுத்த கூடாது.
3. கூகுள் மேப்ஸ் அடிக்கடி புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறது, அதில் கவனம்கொள்வது சிறப்பானது.
4. கூகுள் மேப்ஸ் உங்களுக்கு வேகமான வழி (fastest route) என்று மாற்று வழியை காண்பித்தால் (alternative route) கூடுதல் கவனம் தேவை.

குறிப்பாக இதை செய்யாதீங்க.. ரொம்ப கவனம் தேவை:

5. உங்களுக்கு பரிச்சியம் இல்லாத வழியில் பயணிக்கும் பொழுது மிக வேகம் மிக நன்று.
6. நீங்கள் செல்லும் பாதையில் சாலை குறுகளாகவோ (narrow roads) அல்லது சந்தேகத்திற்குரிய அறிகுறிகளை கண்டால் அருகில் இருப்பவர்களிடம் வழி கேட்பது சிறந்தது.
7. கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் பொழுது ஸ்ட்ரீட் வியூ (street view) அம்சத்தை பயன்படுத்துங்கள்.
8. நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அந்த வழியை ஸ்ட்ரீட் வியூவில் (google maps street view) வைத்து ஜூம் செய்து பார்த்துவிட்டு பயணிக்க துவங்குங்கள்.

9. பயணிக்கும் முன் கொஞ்சம் நேரம் எடுத்து நீங்கள் பயணிக்கும் வழியை ஆராய்ந்த பிறகு பயணிப்பது பாதுகாப்பானது.
10. இந்த செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாக கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Google Maps Safety and Secure Tips To Avoid Dangerous Route and Situations
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X