சுந்தர் பிச்சைக்கு கும்பிடு.. ரியல் டைமில் அடிக்கும் Google.. ஏர் குவாலிட்டிக்கு கூகுள் மேப் போதும்!
டெக் உலகின் ஜாம்பவான் சுந்தர் பிச்சையின் கீழ் செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் (Google Maps) ஆப்பில் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நேவிகேஷன் மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் வியந்து பார்த்த டெக்னாலஜிகளை ஒரேவொரு அப்டேட்டில் கொண்டுவந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் பே (Google Pay) கூகுள் மேப் (Google Map) போன்ற பெரும்பாலான ஆப்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத சக்தியாகவே மாறிவிட்டது.

இத்தனை கோடி மக்களை, தன்பக்கமே தக்க வைத்திருப்பதற்கு பெரும்பாலும் இலவச சேவைகளையே அடித்தளமாக பயன்படுத்தி வருகிறது. இப்படி, இலவசமாக நேவிகேஷன் டெக்னாலஜியை வழங்கிவரும் கூகுள் மேப் ஆப்பில் ஏர் குவாலிட்டி (Air Quality) மற்றும் வெதர் அப்டேட் (Weather Update) போன்ற மிரளவிடும் பீச்சர்களை சேர்த்துள்ளது.
இந்த கூகுள் மேப் ஏர் குவாலிட்டி பீச்சர் (Google Maps Air Quality Feature) மூலம், உங்களது லோகேஷனில் ரியல் டைம் ஏர் குவாலிட்டியை செக் செய்து கொள்ளலாம். அதேபோல வெதர் அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த பீச்சர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
முதலில் உங்களது ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) போன்களில் இருக்கும் கூகுள் மேப் ஆப்பை அப்டேட் (Google Maps App Update) செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு வழக்கம்போல அந்த ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஹோம் ஸ்கிரீனின் மேலே இடதுபுறம் புதிதாக வெதர் ஐகான் (Weather Icon) தோன்றி இருக்கும்.
இதுவே புதிதாக சேர்க்கப்பட்ட பீச்சராகும். இந்த ஐகானை ஓப்பன் செய்தால், உங்களது லோகேஷனில் இருக்கும் வெதர் போர்காஸ்ட் (Weather Forecast) இடம் பெற்றிருக்கும். இது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கணிக்கப்பட்டிருக்கும். ஆகவே, மழை காலங்களில் டிராவல் செய்யும்போது, கூகுள் மேப் ஆப் மூலமே வானிலைகளை கணித்து கொள்ளலாம்.
இந்த ஐகானிலேயே வெதர் அப்டேட்களுக்கு கீழே ஏர் குவாலிட்டி ஆப்ஷன் தோன்றும். அதோடு சீ ஏர் குவாலிட்டி மேப் (See Air Quality Map) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஓப்பன் செய்தால், உங்களது லோகேஷனில் இருக்கும் ஏர் குவாலிட்டி காண்பிக்கப்படும். இந்த ஏர் குவாலிட்டி தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டே யூசர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air Quality Index) தகவல்களானது, மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) மூலம் வழங்கப்படுகிறது. ஆகவே, உண்மையான ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் கூகுள் மேப்ஸ் யூசர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஏர் குவாலிட்டி மற்றும் வெதர் அப்டேட்களை நீங்கள் செல்லும் எந்த லோகேஷன்களிலும் ரியல்-டைமில் தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆப்பில் ஏர் குவாலிட்டி 0 முதல் 500 வரையில் கணக்கிடப்படுகிறது. ஆகவே, 0 - 50 குட் (Good) என்றும், 51 - 100 மிதமானது (Moderate) என்றும், 101 - 150 ஆரோக்கியமற்றது (Unhealthy) என்றும் குறிப்பிடப்படுகிறது. இதற்கு மேல் இருந்தால் மிகவும் ஆரோக்கியமற்றதாகும்.


Click it and Unblock the Notifications