கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.!

|

கூகுள் நிறுவனம் அன்மையில் பல்வேறு புதி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது, அதன்படி கூகுள் பயன்பாட்டில் நமக்கு பிடித்த செய்திகள் மற்றும் தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்
கூகுள் மேப்ஸ் பயன்பாட்டில் புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டே சேஃபர்

ஸ்டே சேஃபர்

அதன்படி கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) என்ற புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இந்த புதிய அமசம் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கால்டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா

கால்டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா

இந்த மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கால்டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா , மற்றும் இதர பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவோருக்கு பயன்தரும் விதமாக இருக்கிறது.

தங்கத்தால் ஆன கிரகத்திற்குச் செல்லும் நாசா! நாசாவின் அடுத்த புதிய திட்டம் இதுதான்!தங்கத்தால் ஆன கிரகத்திற்குச் செல்லும் நாசா! நாசாவின் அடுத்த புதிய திட்டம் இதுதான்!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது

இந்த புதிய அம்சம் என்னவென்றால் போக்குவரத்தை பயன்படுத்தும் பயனர்கள் பயணிககும் இடம் சார்ந்த விவரங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தியாவில் முதற்கட்டமாக இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்தல் வேண்டும்.

பயன்படுத்துவதற்கு  அருமையாக இருக்கும்

பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்

ஆண்ட்ராய்டு தளத்தில் மேப்ஸ் செயலியினை அப்டேட் செய்ததும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேடி, அதற்கான வழியை பார்க்க வேண்டும், பின்பு இவ்வாறு செய்யும் போதே ஸ்டே சேஃபர் பட்டன் திரையில் தோன்றும் ஸ்டே சேஃபர் பட்டன் கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் மற்றும் ஷேர் லைவ் ட்ரிப்ஸ் என்ற இரு ஆப்ஷன்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அமெரிக்க ராணுவத்திடம் அமெரிக்க ராணுவத்திடம் "ஏலியன் டெக்னாலஜி" இருக்கிறது! வைரலாகும் வீடியோ!

கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ்

கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ்

கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் அம்சம் பொறுத்தவரை கூகுள் மேப்ஸ் பரிந்துரை செய்த வழியை விட்டு 0.5கிலோமீட்டர் சென்றதும், பயனருக்கு நோட்டிஃபிகேஷனை வழங்கி எச்சரிக்கை செய்யும். பின்பு பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் இருந்து எத்தனை தூரம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதை ஒப்பிட்டு காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு மேப்ஸ் உதவியுடன் அப்பகுதியில் செல்ல வேண்டிய இடத்தை எளிமையாக அடையலாம்

பேஸ்புக், வாட்ஸ்ஆப்

பேஸ்புக், வாட்ஸ்ஆப்

அதேபோன்று ஷேர் லைவ் டிரிப் அம்சத்தை பொறுத்தவரை பயனர் செல்லும் இடம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு நேரலையில் பகிரப்படும். இது கொண்டு பயனர் லொகேஷனை பேஸ்புக், வாட்ஸ்ஆப், போன்ற செயலிகளில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.!ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.!

 ஐ.ஒ.எஸ் பயனர்களுக்கு எப்போது?

ஐ.ஒ.எஸ் பயனர்களுக்கு எப்போது?

தற்போது வழங்கபபட்டுள்ள இந்த புதிய அம்சம் ஐ.ஒ.எஸ் பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps releases 'Stay Safer' feature in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X