Home
News

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்.. இனி கவலைப்படாம வண்டிய ஓட்டலாம்.. ஏன்?

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அதுவும் இந்த கூகுள் மேப்ஸில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு புதிய அம்சம் தற்போது கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

பவர் சேவிங் மோடு
அதாவது கூகுள் மேப்ஸில் தற்போது பவர் சேவிங் மோடு (Power Saving Mode) எனும் அம்சம் தான் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாம் பயணம் செய்யும் போது கூகுள் மேப்ஸில் பவர் சேவிங் மோடு பயன்படுத்தினால் நமது போனின் பேட்டரியை சேமித்து, பயன்பாட்டு நேரத்தை நீட்டிக்க முடியும்.

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்..

அதுவும் பவர் சேவிங் மோடு என்பது எளிமையான கருப்பு-வெள்ளை வரைபட காட்சி ஆகும். இதைச் செயல்படுத்தியதும், வழக்கமான நேவிகேஷன் அனுபவம் மாற்றப்பட்டு கருப்பு-வெள்ளை நிறத்தில் அடிப்படை வழி அறிவுறுத்தல்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். அவசியமில்லாத தகவல்கள் இந்த பவர் சேவிங் மோடு முறையில் காட்டப்படாது. இதன் விளைவாக, நமது போனின் பேட்டரியை அதிகமாகச் சேமிக்க முடியும்.

ஆனால் இந்த புதிய அம்சம் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதவது பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் போன்ற போன்களுக்கு மட்டுமே பவர் சேவிங் மோடு அம்சம் கிடைக்கும். கூடிய விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் பயன்படுத்தும் பயனர்கள், இந்த புதிய அம்சம் தங்களின் போன்களில் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க Google Maps > Settings > Navigation எனப் பின் தொடர்ந்து, Driving Options கீழ் உள்ள Power Saving Mode ஐ இயக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

10 புதிய அம்சங்கள்

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்ஸ் செயலியில் Gemini AI, மெட்ரோ டிக்கெட் முன்பதிவு, போக்குவரத்து அப்டேட்ஸ் உள்ளிட்ட 10 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதுவும் கூகுள் மேப்ஸ் செயலி ஆனது தற்போது ஜெமினி AI-யை நேரடியாக ஒருங்கிணைப்பதால், இனி பயனர்கள் தங்கள் தொலைபேசியை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபடலாம். அதாவது போனை தொடாமல் ஜெமினி உடன் கூடிய கூகுள் மேப்ஸ் செயலியில் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்..

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்கள் வழங்குகிறது. இந்த அப்டேட் நாம் செல்லும் இடங்களுக்குத் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கி உள்ளது. அதுவும் பயனாளர்கள் தங்களது வாகனத்தைக் காட்ட கிளாசிக் பைக், ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற வடிவங்களில் எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9 இந்திய மொழிகளில் வழிகாட்டும் குரல் வசதியும் வழங்கப்படும். இதுபோன்ற பல சிறப்பான அம்சங்கள் தற்போது கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps now updated with Power Saving Mode: how to use it on Pixel 10 series phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X