கூகுள் மேப்ஸ் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் Go எனும் அம்சம்.! என்ன சிறப்பு? எதற்கு தெரியுமா??

|

உலகளவில் கூகுள் மேப்ஸ் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும். அதன்படி அடிக்கடி பார்வையிடும் இடங்களுக்கு பயனர்கள் எளிதில் செல்ல உதவும் நோக்கத்தின் கீழ் கூகுள் மேப்ஸ் புதிய Go என்ற Tab-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போது Explore மற்றும்

இந்த புதிய டேப் ஆனது தற்போது Explore மற்றும் Saved tabs-களுக்கு இடையில் அமர்ந்திருக்கும் மற்றும் Commute டேப்பை Replace செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், கூகுள் மேப்ஸ்-ன் Go tab ஆனது உங்களுக்கு பிடித்தமான இடங்களை Pin செய்து வைக்கவும். அதன் வழியாக அவைகளை பற்றிய தகவல்களை விரைவாகப்பெறவும் அனுமதிக்கும்.

 வழியாக Frequent destination

மேலும் இந்த Go tab வழியாக Frequent destinations-களை, அதாவது கல்லூரி அல்லது மளிகை கடைகள் போன்றநீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களுக்கான பாதைகள், அவற்றை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்..

கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?கலிபோர்னியாவில் தோன்றிய மர்மமான மூன்றாவது மோனோலித் உருவம்.! ஏலியன் செயலா? அல்லது ரசிகர்களின் செயலா?

 கூடிய விரைவில் கூகுள்

இந்த புதிய கோ டேப் கூடிய விரைவில் கூகுள் மேப்ஸ்-இல் நேரலைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தனது வலைப்பதிவு வழியாக இதை உறுதியும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள்,

குறிப்பாக கோ டேப் ஆனது பயனர்கள் அடிக்கடி செல்லும் பொது போக்குவரத்து பாதைகளை பின் செய்யவும் அனுமதிக்கும். பின்பு நீங்கள் பொது போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், நீங்கள் குறிப்பிட்ட பாதைகளை பின் செய்யலாம், இது துல்லியமான புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள், உங்கள் உள்ளூர் போக்குவரத்து நிறுவனத்திலிருந்து அணுக கிடைக்கும் அலெர்ட்கள் போன்றவைகளையும்வழங்கும்.

ஒரே இடத்திற்கான பல வழிகளை கூட

அதேபோல் ஒரே இடத்திற்கான பல வழிகளை கூட நீங்கள் பின் செய்யலாம். இதில் எது உங்களை மிகவும் விரைவாக கொண்டு செல்லும் என்பதையும் காணலாம் என்று கூகுள் நிறுவனம் அதன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

கூகுள் மேப்ஸ் புதிய community feed-

அண்மையில் கூகுள் மேப்ஸ் புதிய community feed-ஐ அதன் எக்ஸ்ப்ளோர் டேப்-ல் அறிமுகம் செய்தது. இந்த community feed ஆனது அருகில் இருக்கும் நிகழ்வுகள் மற்றும் இடங்களின் பரிந்துரையை வழங்குகிறது.

அதேபோல் நீங்கள் பின்தொடரும் நபர்கள் மற்றும் வணிகங்கள் வழங்கும் சமீபத்திய மதிப்புரைகள், புகைப்படங்கள் மற்றும் உங்களுக்கு அருகில் இருக்கும் இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் போஸ்ட்களையும் இது காட்டுகிறது. அதேபோல் இது உணவு மற்றும் பானம், வணிகர்கள் போன்ற நிபுணர்களின் உள்ளடக்கத்தையும், பிரபலமான வெளியீட்டு நிறுவனங்களின் கட்டுரைகளையும் கூட வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps getting a new ‘Go’ tab to help easily navigate to visited places: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X