உங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரியை மற்றவர்கள் டிராக் செய்ய உதவும் கூகுள் மேப்!
கடந்த மாதம் கூகுள் நிறுவனம், 'இந்தியாவின் முதல் இருசக்கர வாகன வசதி' யை(இந்தியா பர்ஸ்ட் டூவீலர்) சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது.
கூகுள் நிறுவனம் தனது நேவிகேசன் செயலியான 'கூகுள் மேப்ஸ்'-ஐ மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி பணியாற்றிவருகிறது. அந்நிறுவனம் தற்போது தனது ஆண்ராய்டு பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களின் கருவியில் எவ்வளவு சதவீதம் பேட்டரி மீதம் உள்ளது என்பதை பார்க்க முடியும். இந்த வசதியானது கூகுள் மேப்ஸ்-ல் உள்ள லோகேசன் ஷேரிங் வசதியுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பயனர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மற்றவர்களுடன் பகிரும் போது, தங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரியின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும் அனைவரும் பார்க்கும் வகையில் பகிரமுடியும். ஆண்ராய்டு போலீஸ் இணையதளத்தின் அறிக்கைபடி, பேட்டரி அளவை பகிரும் சில காலமாக செயல்பாட்டில் இருந்தாலும், அனைவராலும் அதை பார்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த புதிய வசதியானது இதுவரை துல்லியமான பேட்டரி அளவை காண்பித்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் போனின் பேட்டரி அளவு 15%க்கும் கீழாக இருந்தாலும், "ஜானின் பேட்டரி அளவு 50லிருந்து 75% வரை இருக்கிறது" என்று சம்பிரதாயமாக மெசேஜ் காண்பிக்கப்படுகிறது என மேலும் கூறுகிறது அந்த அறிக்கை. தற்போது கூகுள் நிறுவனம் இந்த வசதியில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், படிப்படியாக அனைவருக்கும் இந்த வசதியை வழங்கும் எனவும் தெரிகிறது.

லோகேசனை பகிரும் வசதியை பயன்படுத்தாத பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் பயனுள்ளதாக இருக்காது. எனினும், மற்றொருபுறம் லோகேசனை பகிரும் வசதியை பயன்படுத்தும் நபர்களுக்கு, மற்றவர்களின் ஸ்மார்போனின் பேட்டரி நிலையை தொடர்ந்து கண்காணிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கடந்த மாதம் கூகுள் நிறுவனம், 'இந்தியாவின் முதல் இருசக்கர வாகன வசதி' யை(இந்தியா பர்ஸ்ட் டூவீலர்) சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது. ஹாங்க்காங், இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து மற்றும் வியாட்னாம் போன்ற நாடுகளில் இந்த வசதியை கூகுள் வெளியிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications