Home
News

சபாஷ் கூகுள்.. சரியான நேரத்தில் Google Maps செயலியில் அறிமுகமானது புதிய அம்சம்..

இந்தியா முழுவதும் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த செயலியை ஒரு சில இடங்களில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கல் ஆகிவிடும். இந்நிலையில் Air View+ என்ற புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இந்தியாவில் மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உதவும் வகையில் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்க Air View+ என்ற புதிய அம்சத்தைக் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த புதிய அம்சம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சரியான நேரத்தில் Google Maps செயலியில் அறிமுகமானது புதிய அம்சம்..

குறிப்பாக உள்ளூர் காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள்,ஆராய்ச்சியாளர்கள், காலநிலை செயல்பாட்டுக் குழுக்கள், பெருநிறுவனங்கள், நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் காற்றில் உள்ள பிரச்சனையைக் குறித்துத் தெரிந்துகொள்ள கூகுளின் Air View+ அம்சம் பயன்படும் என்று கூறப்படுகிறது.

அதுவும் Aurasure மற்றும் Respirer Living Sciences போன்ற காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் காற்றின் தரத்தைக் கண்காணிக்க தேவையான நகரங்களில் காற்றின் தர சென்சார் நெட்வொர்க்கை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்களின் சென்சார்கள் ஒவ்வொரு நிமிடமும் காற்றின் தர அளவீடுகளை வழங்குகின்றன. அதேபோல் இந்த சென்சார்கள் 150க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவை காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றன என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஐஐடி ஹைதராபாத், ஐஐடி டெல்லி, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், CSTEP போன்ற காலநிலை குழுக்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆதரவுடன் இந்த சென்சார்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. பின்பு காற்றின் தர அளவீடுகளை விரைவாக கணக்கிட கூகுள் ஏஐ (Google AI) வசதியைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் கூகுள் ஏஐ ( Google AI) மூலம் இயக்கப்படும் Air View+ அம்சம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கூகுள் மேப்பில் உடனுக்குடன் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்குகிறது. அதன்பின்பு சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் காற்றின் தர அளவீடுகள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 சரியான நேரத்தில் Google Maps செயலியில் அறிமுகமானது புதிய அம்சம்..

அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலயில்ஃபிளைஓவர் அலர்ட் (Flyover Alerts) ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.

இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் என்ற வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது கூகுள். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும். அதேபோல் கூகுள் மேப்ஸ் விரைவில் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுவர உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps Launches Air View Plus in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X