Home
News

கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய வசதி.. ஒவ்வொரு இந்தியரும் தெரிஞ்சுக்கணும்.. ஏன்?

கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்களை சேர்த்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸில் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் டெல்லி உட்பட பல முக்கிய நகரங்களில் தற்போது காற்று மாசுபாடு (Pollution) அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. எனவே உங்கள் சுற்றுப்புறத்தின் காற்றின் தரத்தை அறிய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய வசதி..

அதாவது உலகின் 40-க்கும் அதிகமான நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிகழ்நேர AQI கண்காணிப்பு (Real-time AQI Tracker) எனும் அம்சம் மூலம், உங்கள் பகுதியில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உடனே தெரிந்துகொள்ளலாம்.

முன்பு கூகுள் மேப்ஸில் இந்த AQI அளவீடுகள் தாமதமாகவே காட்டப்பட்டன. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தின் லைவ் காற்றின் தரத்தை சரிபார்க்க முடியும். ஆகவே காலையில் உடற்பயிற்சிக்கு செல்வதற்கு முன், அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு முன் அல்லது வேறு பயணத் திட்டங்களை வகுப்பதற்கு முன், காற்றின் தரத்தை பற்றி துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.

அதுவும் இந்த வசதியின் மூலம் சுகாதாரத் தகவல்களுடன் உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை பாதுகாப்பாகத் திட்டமிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காற்றின் தரத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கூகுள் மேப்ஸ் ஒரு வண்ணக் குறியீட்ட பயன்படுத்துகிறது.

இந்த அளவீடுகள் ஒவ்வொரு மணி நேரம் மணி நேரமும் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இந்த வசதி மொபைல் மற்றும் டெஸ்க்டாப் என இரண்டு தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இப்போது
பார்க்கலாம்.

காற்றின் தரம்:

0-50 வரை உள்ள AQI வரம்பு நல்லது (Good) என்று பச்சை பச்சை (Green) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

51-100 வரை உள்ள AQI வரம்பு ஆனது திருப்தி (Satisfactory) என்று மஞ்சள் (Yellow) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது ஏற்கத்தக்க காற்றின் தரம் ஆகும்.

101-200 வரை உள்ள AQI வரம்பு மிதமானது (Moderate) என்று ஆரஞ்சு (Orange) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது சிலருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

201 -300 வரை உள்ள AQI வரம்பு மோசம் (Poor) என்று சிவப்பு (Red) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இதில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது ஆரோக்கியமில்லை என்று கூறப்படுகிறது.

301-400 வரை உள்ள AQI வரம்பு ஆனது மிக மோசம் (Very Poor) என்று ஊதா(Purple) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது தீவிர சுகாதார எச்சரிக்கை தேவை என்று விளக்கப்படுகிறது.

401-500 வரை உள்ள AQI வரம்பு அபாயம் (Critical) என்று கருஞ்சிவப்பு (Maroon) நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது தீவிர சுகாதார அச்சுறுத்தல் என்று விளக்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழிகாட்டுதல் மூலம் நீங்கள் வெளியே செல்வது சரியான நேரமா அல்லது மாஸ்க் அணிய வேண்டுமா என்பதை உடனடியாக அறிய உதவுகிறது.

கூகுள் மேப்ஸ் கொண்டுவந்த புதிய வசதி..

கூகுள் மேப்ஸில் AQI-ஐ தெரிந்துகொள்வது எப்படி?

1.முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் போனில் உள்ளது கூகுள் மேப்ஸ் செயலியை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். பின்பு செயலியை திறந்து நீங்கள் அறிய விரும்பும் நகரம் அல்லது இருப்பிடத்தை தேட வேண்டும்.

2. அதன்பின்னர் கூகுள் மேப்பின் வலதுபக்கத்தில் உள்ள layers ஐகானை கிளிக் செய்யவும். அடுத்து கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களில் Air Quality என்பதை தேர்வு செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பகுதியின் AQI அளவையும் பிற தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps is useful tool for checking real-time AQI in your area. Heres the complete information
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X