கூகுள் மேப்ஸ்: வேற லெவல் அப்டேட் வசதியுடன் வெளிவருகிறது.!
வழக்கமாக மேப்ஸ் செயலியில் உங்களுக்கு வழிகாட்டும் அம்புக்குறிக்கு பதிலாக இந்த அனிமேஷன் பொம்மைகள் வழங்காட்டும், பின்பு முகவரி தெரியாத இடங்களில் மிகவும் அருமையாக இந்த புதிய வசதி செயல்படும் எனத் தகவல் தெர
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி கூகுள் மேப்ஸ் புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் கூகுள் I/O 2018 நிகழ்ச்சியில் மேப்ஸ் பக்கத்தில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் பற்றி விவரிக்கப்பட்டன, அதன்படி செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில முக்கிய அம்சங்கள் இந்த கூகுள் மேப்ஸ் பக்கத்தில் சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம்:
விரைவில் கூகுள் மேப்ஸ் பக்கத்தில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற புதிய வசதி கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது, மேலும் இந்த புதிய வசதி உங்களின் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயிலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணம் செய்யும்போது துல்லியமாக வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்ஃபேஸ்:
மேலும் கூகுள் மேப்ஸ் செயலியில் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும்படி உருவாக்கப்படுகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் திசை தெரியாத இடங்களில் கூட கேமராவை காண்பித்தால் போதும் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும்.

விளம்பர பலகைகள்:
குறிப்பாக இந்த அம்சம் தெருக்களில் இருக்கும் கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அனிமேஷன் பொம்மைகள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்படும்
என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிமேஷன் பொம்மைகள்:
வழக்கமாக மேப்ஸ் செயலியில் உங்களுக்கு வழிகாட்டும் அம்புக்குறிக்கு பதிலாக இந்த அனிமேஷன் பொம்மைகள் வழங்காட்டும், பின்பு முகவரி தெரியாத இடங்களில் மிகவும் அருமையாக இந்த புதிய வசதி செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில்:
விரைவில் இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications