Home
News

கூகுள் மேப்ஸ் ஸ்பீடு லிமிட் வந்துடுச்சு.. பைக், கார், வேன் டிரைவர்கள் இதை பாத்துகோங்க.. எதுக்கு?

கூகுள் இந்தியா நிறுவனம் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் முக்கிய அம்சத்தை சேர்ந்துள்ளது. பைக், கார், வேன் போன்ற வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இது இருக்கிறது. இனிமேல் வாகனத்தை ஓட்டும்போது அந்த ஓட்டுநர்களுக்கு இது முக்கியமாகவும் மாறப் போகிறது. இந்த புதிய கூகுள் மேப்ஸ் அம்சத்தின் முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் நொய்டா, குருகிராம் போன்ற முக்கிய நகரங்களில் ஏற்படும் சாலை விபத்துகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பைக், கார், வேன், பஸ் போன்றவை அதிகமாக இருப்பதால், வேக கட்டுப்பாடு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. இந்த வேக கட்டுப்பட்டுக்காகவே கூகுள் மேப்ஸ் புதிய அம்சத்தை கொண்டுவந்து இருக்கிறது.

கூகுள் மேப்ஸ் ஸ்பீடு லிமிட் வந்துடுச்சு.. பைக், கார், வேன் டிரைவர்கள்?

நொய்டாவின் போக்குவரத்து காவல்துறை (Traffic Police) மற்றும் கூகிள் இந்தியா (Google India) இணைந்து கூகிள் மேப்ஸில் பல்வேறு சாலைகளில் அதிகபட்ச வேகத்தை காண்பிக்க தொடங்கி இருக்கின்றன. சாலை விபத்துகளை தடுப்பதற்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஸ்பீடு லிமிட் (Speed Limit) கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

நொய்டா எக்ஸ்பிரஸ்வே, யமுனா எக்ஸ்பிரஸ்வே, எலிவேட்டட் ரோடு மற்றும் பிற முக்கிய சலைகளில் இந்த ஸ்பீடு லிமிட் காண்பிக்கப்படும். இதை ஓட்டுநர்கள் நேடியான கூகுள் மேப்ஸ் வழியாக பார்த்து கொள்ளலாம். அந்தந்த சலுகைகளில் இருக்கும் ஸ்பீடு லிமிட்டின்படி கூகுள் மேப்ஸ் ஓட்டுநர்களை வழிநடத்தும். ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஸ்பீடு லிமிட் இருக்கிறது.

நொய்டா ஸ்பீடு லிமிட்

1. கூகுள் மேப்ஸ் இப்போது நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் முக்கிய சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பீடு லிமிட் மற்றும் உங்களது வாகனம் சென்று கொண்டிருக்கும் ரியல் டைம் ஸ்பீடு லிமிட்டை (Real-time Speed) ஆகியவற்றை ஒரே நேரத்தில் டிஸ்பிளேவில் காண்பிக்கும்.

2. பைக்குகள், கார்கள், வேன்கள், பஸ்கள், போன்று இருக்கும் வாகனங்கள் இதற்கான கனரக, நடுத்தர, இலகுரக, இரு சக்கர வாகனங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மற்றும் நொய்டா சலுகைகளுக்கு ஏற்ப ஸ்பீடு லிமிட் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

3. இந்த ஸ்பீடு லிமிட் நிர்ணயிக்கப்பட்ட சலுகைகளுக்கு ஓட்டுநர்கள் சென்றாலே போதும், ஜிபிஎஸ் மூலம் அந்த சாலைக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்பீடு லிமிட் மற்றும் வாகனம் சென்று கொண்டிருக்கும் ரியல் டைம் ஸ்பீடு லிமிட் ஓட்டுநர்களுக்கு காண்பிக்கப்படும்.

4. நொய்டா சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக இருக்கும் விபத்து அபாய மண்டலம் (Accident Prone Zone) சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, முன்கூட்டியே அலெர்ட் கொடுக்கும். இதை பார்த்து, கவனத்துடன் வாகனத்தை ஓட்டி செல்லலாம்.

கூகுள் மேப்ஸ் - போக்குவரத்து காவல்துறை

* சாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஸ்பீடு லிமிட் ஆனது நொய்டா போக்குவரத்து காவல்துறையின் மூலம் கொண்டுவரப்பட்டவை. ஆகவே, வாகன ஓட்டிகள் அந்த ஸ்பீடு லிமிட்டுக்கு மேலே சென்றால், அபராதம் விதிக்கப்படலாம்.

* சாலைகளில் ஸ்பீடு லிமிட்டில் மாற்றம் செய்யப்பட்டால், உடனடியாக கூகுள் மேப்ஸ் அதை அப்டேட் செய்துவிடும். ஆகவே, ரியல்-டைமில் ஸ்பீடு லிமிட் அப்டேட் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு காண்பிக்கப்படுகிறது.

* நொய்டாவில் சாலை விபத்துக்களில் 50 சதவீதம் ஓவப்ஸ்பீடிங் (Overspeeding) காரணமாக ஏற்படுகிறது. இதை குறைப்பதற்காக உத்தரப் பிரதேச டி.ஜி.பி ராஜீவ் கிருஷ்ணன் கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் வழியாக இந்த ஸ்பீடு லிமிட்டை களமிறக்கி இருக்கிறார்.

நொய்டாவில் தொடங்கப்பட்ட இந்த கூகுள் ஸ்பீடு லிமிட் ப்ராஜெக்ட் இந்திய நகரங்களில் ஓவர்ஸ்பீடிங்கால் ஏற்படும் விபத்துகளை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். உத்தரப் பிரதேசத்துக்கு பிறகு இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் இந்த ஸ்பீடு லிமிட் ப்ராஜெக்ட் வரு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps is showing real-time road speed limits in Noida: Check complete information here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X