கூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வெளியீடு.!

கூகுள் மேப்ஸ் செயிலியில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே பயன்படும், விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குளத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்படும்.

|

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளது, தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில்
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒரு அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு இப்போது நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வெளியீடு.!

மேலும் அம்பு குறி மாற்றம் செய்யப்பட் இடத்தில் தற்சமயம் கார் பொம்மைகளை வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம். மேலும் இந்தப் பயன்பாடு அனைவருக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கார் பொம்மைகள்:

கார் பொம்மைகள்:

இப்போது கூகுள் மேப்ஸ் செயிலியில் வழங்கப்பட்டுள்ள புதிய கார் பொம்மைகள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து
செல்லும், பின்பு பயனர்களின் வசதிக்கு தகுந்தபடி அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து
பயன்படுத்த முடியும்.

டிரைவிங் நேவிகேஷன்:

டிரைவிங் நேவிகேஷன்:

வாடிக்கையாளர்கள் ஸ்வாப் செய்ய பயனத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றை உபயோம் செய்ய சற்று வித்தியசமாக இருக்கும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ்:

ஐஒஎஸ்:

கூகுள் மேப்ஸ் செயிலியில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே பயன்படும், விரைவில் ஆண்ட்ராய்டு
இயங்குளத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் :

விரைவில் :

விரைவில் கூகுள் மேப்ஸ் பக்கத்தில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற புதிய வசதி கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது, மேலும் இந்த புதிய வசதி உங்களின் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயிலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணம் செய்யும்போது துல்லியமாக வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
விளம்பர பலகைகள்:

விளம்பர பலகைகள்:

குறிப்பாக இந்த அம்சம் தெருக்களில் இருக்கும் கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்படும்.

Best Mobiles in India

English summary
Google Maps for iOS gets new 3D car icons to replace classic blue navigation arrow ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X