இனி அண்டார்டிக்காவிற்கும் கூகுள் மேப் வழிகாட்டும்!

மாறாக இதன் தென்முனையில் முதலில் காலடி எடுத்து வைத்த ரோல்டு அமண்ட்சன், எர்னஸ்ட் ஷாக்லெட்டன் மற்றும் ராபர் பால்கன் ஸ்காட் போன்ற வீரதீர விளையாட்டுகளை விரும்புவோரால் மட்டுமே இந்த அண்டார்ட்டிக்கா பகுதிக்கு செல்ல முடியும்.
மேலும் அண்டார்டிக்கா பகுதிக்குச் செல்ல முனைந்து காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அதற்கு ஒரு தீர்வை இப்போது கூகுள் கொண்டு வந்திருக்கிறது.
அதாவது அண்டார்டிக்காவி்ன் பானோராமிக் வியூவ் மேப்பை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மேப்பின் மூலம் அண்டார்டிக்காவின் ஒவ்வொரு இடத்தையும் சல்லடை போட்டுத் தேட முடியும்.
இந்த மேப்பை அமெரிக்காவின் மின்னசோட்டா பழ்கலைக்கழகத்தைச் சேர்ந்த போலார் ஜியோஸ்பாட்டியல் சென்டர், நியூசிலாந்தின் அனார்டிக்ஸ் ஹெரிட்டேஜ் டிரஸ்ட் மற்றும் பல நிறுவனங்களோடு இணைந்த இந்த வரைபடத்தை கூகுள் தயாரித்திருக்கிறது.
இந்த கூகுள் மேப் அண்டார்ட்டிக்காவின் ஒவ்வொரு பகுதியையும் மிக அழகாகக் காட்டுகிறது. மேலும் இந்த மேப் பார்ப்பதற்கும் மிகவும் அழகாக அதே நேரத்தில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
மேலும் இந்த புதிய மேப், அண்டார்டிக்காவைப் பற்றி ஆராய விரும்பும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் அந்த பகுதியில் பயணிக்க விரும்பும் மக்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் நம்புகிறது. இனி நாமும் தைரியமாக செல்லலாம் அண்டார்டிக்காவிற்கு.


Click it and Unblock the Notifications