கூகுள் மேப்ஸில் அறிமுகமானது புதிய வசதி.. ஒவ்வொரு இந்தியரும் தெரிஞ்சுக்கணும்.. ஏன்?
கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது கூகுள் நிறுவனம். இந்நிலையில் நடைப்பயணம் செய்யவோ அல்லது சைக்கிளில் செல்லவோ விரும்பும் பயனர்களுக்குத் தகுந்தபடி கூகுள் மேப்ஸ் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கூகிள் மேப்ஸில் நடந்து செல்பவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுபவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினியை (Gemini) அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதற்கு முன்பு, ஜெமினி அம்சம் ஆனது பயனர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு மட்டுமே உதவியது மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியது. தற்போது இந்த புதிய வசதி நடந்து செல்பவர்கள் அல்லது சைக்கிளில் செல்பவர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

கூகுள் மேப்ஸில் ஜெமினி
ஜெமினி வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் கிடைக்கிறது. கூகுள் நிறுவனம் கடந்த 2025 நவம்பரில் கூகுள் மேப்ஸில் ஜெமினியைச் சேர்க்கத் தொடங்கியது. ஆனால் அப்போது அதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருந்தது. தற்போது, ஜெமினி ஒரு குரல் உதவியாளராக மட்டுமே செயல்படுகிறது. அதுவும் கூகுள் மேப்ஸில் நீங்கள் கேள்விகளை டெகஸ்ட் செய்ய முடியாது, உரை வடிவிலான பதில்களையும் பெற முடியாது. எனவே Geminiயை பயன்படுத்த நீங்கள் அதனுடன் பேச வேண்டியதாக இருக்கும்.
நடைப்பயணம் அல்லது சைக்கிள் பயணத்தின் போது Gemini-யை பயன்படுத்த விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிதானது. Google Maps-ஐ திறந்து, உங்கள் இலக்கை தேர்வு செய்து, வழக்கம்போல் வழிசெலுத்தலை (navigation) தொடங்கினால் போதும். குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கூகுள் மேப்ஸில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சங்களையும் இங்கே பார்க்கலாம்.
புதிய அவதார்: இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கி உள்ளது. அதுவும் பயனாளர்கள் தங்களது வாகனத்தைக் காட்ட கிளாசிக் பைக், ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற வடிவங்களில் எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9 இந்திய மொழிகளில் வழிகாட்டும் குரல் வசதியும் வழங்கப்படும்.
போக்குவரத்து தடைகள்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்கள் வழங்குகிறது. இந்த அப்டேட் நாம் செல்லும் இடங்களுக்குத் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

மெட்ரோ ரயில்: தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வசதி மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் கூகுள் மேப்ஸ் ஆனது இப்போது சிக்னல்கள் மற்றும் ஸ்டாப் சைன்கள், அருகிலுள்ள உணவகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் பிரபலமான கட்டிடங்கள் போன்ற லேண்ட்மார்க்குகளை (Landmarks) அடையாளம் காட்டும். அதுவும் உங்கள் பயணப் பாதையில் உள்ள இடங்களைத் தேடுவது, மின்சார வாகன (EV) சார்ஜர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, அல்லது ஆண்ட்ராய்டில் உங்கள் வருகை நேரத்தை (ETA) நண்பர்களுடன் பகிர்வது இன்னும் எளிதாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








