Home
News

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த 10 புதிய அம்சங்கள்.. உற்சாகத்தில் இந்திய பயனர்கள்.. இதோ முழு விவரம்..

கூகுள் (Google) நிறுவனம் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்கி கொண்டே இருக்கிறது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்ஸ் செயலியில் Gemini AI, மெட்ரோ டிக்கெட் முன்பதிவு, போக்குவரத்து அப்டேட்ஸ் உள்ளிட்ட 10 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த 10 புதிய அம்சங்கள்..

கூகுள் மேப்ஸ் செயலி ஆனது தற்போது ஜெமினி AI-யை நேரடியாக ஒருங்கிணைப்பதால், இனி பயனர்கள் தங்கள் தொலைபேசியை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபடலாம். அதாவது போனை தொடாமல் ஜெமினி உடன் கூடிய கூகுள் மேப்ஸ் செயலியில் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.

அதேபோல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்கள் வழங்குகிறது. இந்த அப்டேட் நாம் செல்லும் இடங்களுக்கு தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கி உள்ளது. அதுவும் பயனாளர்கள் தங்களது வாகனத்தைக் காட்ட கிளாசிக் பைக், ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது ஸ்கூட்டர் போன்ற வடிவங்களில் எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9 இந்திய மொழிகளில் வழிகாட்டும் குரல் வசதியும் வழங்கப்படும்.

அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வசதி மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் மேப்ஸ் ஆனது இப்போது சிக்னல்கள் மற்றும் ஸ்டாப் சைன்கள், அருகிலுள்ள உணவகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் பிரபலமான கட்டிடங்கள் போன்ற லேண்ட்மார்க்குகளை (Landmarks) அடையாளம் காட்டும். அதுவும் உங்கள் பயணப் பாதையில் உள்ள இடங்களைத் தேடுவது, மின்சார வாகன (EV) சார்ஜர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, அல்லது ஆண்ட்ராய்டில் உங்கள் வருகை நேரத்தை (ETA) நண்பர்களுடன் பகிர்வது இன்னும் எளிதாகியுள்ளது.

கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்த 10 புதிய அம்சங்கள்..

கூகுள் மேப்ஸில் ஜெமினி போக்குவரத்து தடைகள் பற்றிய தகவல்களை அனைவருக்கும் பகிர்வதையும் மேலும் எளிதாக்குகிறது. அதாவது இந்த இடத்தில் ஒரு விபத்து தெரிகிறது, முன்புறம் வெள்ளம் இருப்பதாகத் தோன்றுகிறது, அல்லது அங்கே போக்குவரத்து மந்தமாக உள்ளது, கவனமாக இருங்கள் என்று போக்குவரத்து தடைகள் பற்றிய தகவல்களை பகிரமுடியும்.

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய அப்டேட் குறித்து Google Maps India நிறுவனத்தின் பொது மேலாளர் லலிதா ரமணி கூறியது என்னவென்றால், இந்தியாவுக்கான எங்கள் அணுகுமுறை எப்போதும் செயற்கை நுண்ணறிவை உள்ளூர் தேவைகளுடன் இணைப்பதாகும். பின்பு ஜெமினி இணைப்பு மூலம் மேப்ஸ் இன்று பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக இது பயணத்தை புத்திசாலித்தனமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps in India gets 10 new features: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X