இந்த இடத்தில் போலீஸ் இருக்காங்க.. பாத்து போங்க.. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுத்த கூகுள் மேப்ஸ்..
இந்தியாவில் உள்ள மக்கள் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதாவது அனைத்து இடங்களிலும் இது பயன்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். இந்நிலையில் டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் விதமாகக் கூகுள் மேப்ஸ் பயன்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பெங்களூருவில் உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை எச்சரிப்பதற்காகக் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதன்படி வழக்கமாக விதிமீறல் செய்பவர்களைப் பிடிக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபடும் சில இடங்களைக் கூகுள் வரைபடத்தில் குறித்துள்ளனர்.

அதாவது போக்குவரத்து காவலர்கள் தினமும் காலையில் சாலை விதிகளை மீறுபவர்களைத் தடுத்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கமா உள்ளது. குறிப்பாகச் சாலை விதிகள் அதிகமாக மீறப்படும் முக்கியமான பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு கண்காணிப்பைப் பலப்படுத்துகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பலர் சிக்கியதும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்க போலீசார் வழக்கமாக செக்கிங்கில் ஈடுபடும் பகுதிகளைக் கூகுள் மேப்பில் குறித்துள்ளனர். அதன்படி கூகுள் வரைபடத்தில் சில இடங்களில் இங்கே போலீஸ் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதைப் பார்த்த பயனர் ஒருவர் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார். போலீஸ் இர்தாரே நோட்கோண்ட் ஹோகி (போலீஸ் இருக்காங்க, பார்த்து போங்க) என்று கன்னடத்தில் அலர்ட் மெசேஜ் கொடுத்திருப்பதை நாம் காண முடிகிறது. இந்த பதிவு இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலரும் இதைக் குறித்துப் பதிலளித்து வருகின்றனர்.
அதில் சிலர், ஹெல்மெட் அல்லது லைசென்ஸ் இல்லாமல் அந்த திசையில் பயணித்தால், இந்த அலர்ட்டைப் பார்த்து வேறு பாதையில் சென்று தப்பித்து விடுவார்கள். இந்த யோசனை மிகவும் வேடிக்கையாகத் தோன்றினாலும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரிடம் இருந்து காப்பாற்றுகிறது என்று கூறுகின்றனர்.
இன்னும் சில நபர்கள் இதற்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர். அதாவது பொதுமக்களாகச் சேர்ந்து உருவாக்கிய அவசர உதவி இது என்று பாராட்டி வருகின்றனர். தொழில்நுட்பத்தை இது போன்று வித்தியாசமாகப் பயன்படுத்துவது மிகவும் வியப்பாக இருப்பதாக சில கூறியுள்ளனர். ஆனாலும் கூகுள் மேப்ஸ் செயலியை இதுபோன்ற காரியங்களுக்குப் பயன்படுத்துவது மிகவும் தவறு தான்.

அதேபோல் கூகுள் நிறுவனம் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலி உடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜெமினி-ஐ (Gemini AI) சேர்ந்து இயங்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது கூகுள் நிறுவனம். எனவே இதன் மூலம் நீங்கள் வாய்ஸ் கமெண்ட் வாயிலாகவே நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் குறிப்புகளைப் பெற முடியும். அதுவும் பைக் ஓட்டும் போது இந்த இந்த ஜெமினி மற்றும் கூகுள் மேப்ஸ் உடனான உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








