Home
News

கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் 7 ரகசிய வசதிகள்.. இத்தனை நாளா தெரியாம போச்சே.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் அதிக மக்கள் கூகுள் மேப்ஸை (Google Maps) பயன்படுத்துகின்றனர். அதாவது முன்பின் தெரியாத இடத்திற்கு வெறும் முகவரி மட்டுமே கொண்டு செல்லும் மக்களுக்கு இந்த கூகுள் மேப்ஸ் மிகப் பெரிய உதவியைச் செய்கிறது. அதேபோல இந்த கூகுள் மேப்ஸில் அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்த்த வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த கூகுள் மேப்ஸில் நீங்கள் அறிந்திராத மிகவும் பயனுள்ள 7 வசதிகள் உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் 7 ரகசிய வசதிகள்..

1.கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கலாம்: அதாவது நீங்கள் ஒரு கடைக்கும் செல்லும் முன்பு அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதன்படி கூகுள் மேப்ஸில் உள்ள கடையின் ஐகானை தட்டினால் (store's icon) போதும் அந்த கடையில் உட்புற படங்கள், தயாரிப்பு பட்டியல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களைப் பார்க்க முடியும். பின்பு உங்களுக்குப் பிடித்து பொருட்கள் அங்கு இருக்கிறதா என்பதை வீட்டிலேயே உறுதி செய்து கொள்ளலாம்.

2. நிலத்தை அளக்க உதவும் கூகுள் மேப்: தினசரி நீங்கள் வாக்கிங் செல்லும் தூரத்தைக் கணக்கிடவும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தின் பரப்பளவை அளவிடவும் விரும்பினால் கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கும். அதாவது கூகுள் மேப் செயலியை திறந்து நீங்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்து நீண்ட நேரம் அழுத்தவும் (Long Press), அதன்பின்னர் Measure distance என்பதை தேர்வு செய்து புள்ளிகளை நகர்த்தித் துல்லியமான தூரத்தையும் பரப்பளவையும் எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

3.பெட்ரோல் பங்க் மற்றும் EV சார்ஜிங் ஸ்டேஷன்: இனி நீங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது பெட்ரோல் தீர்ந்துவிடுமோ அல்லது எலக்ட்ரிக் வண்டியின் சார்ஜ் குறைந்துவிடுமோ என்ற கவலைப்படத் தேவையில்லை. அதாவது கூகுள் மேப்ஸில் ஒரு இடத்திற்கு நேவினேஷனை ஆன் செய்து பின்பு வழியில் எங்கு பெட்ரோல் பங்க் மற்றும் EV சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளது என்பதைப் பார்க்க முடியும். அதுவும் தேடல் ஐகானை கிளிக் செய்து Fuel stations அல்லது EV charging stations என்பதைத் தேர்வு செய்தால் போதும் துல்லியமாகக் காட்டிவிடும்.

4. கடை அல்லது ஹோட்டலின் முக்கிய விவரங்கள்: நீங்கள் புதிதாக ஒரு கடைக்கோ அல்லது ஹோட்டலுக்கோ செல்கிறீர்கள் என்றால், அது திறந்திருக்கும் நேரம், முக்கிய வசதிகள், பார்க்கிங் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, சுகாதாரம் குறித்த விவரங்கள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம். அதாவது மற்ற வாடிக்கையாளர்கள் ரேட்டிங் மற்றும் கருத்துக்களை வைத்து, அது உங்கள் நேரத்தை செலவிட சரியான இடம்தானா என்பதைச் சுலபமாக முடிவு செய்யலாம்.

5.சக்கர நாற்காலி: மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலி (Wheelchair) பயன்படுத்தும் நபர்களுக்கு ஏற்ற இடங்களை எளிதாகக் கண்டறிய கூகுள் மேப் உதவுகிறது. இதற்கு செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Accessibility தேர்வு செய்து Accessible Places என்பதை ஆன் செய்யவும். அடுத்து சக்கர நாற்காலி செல்லும் வசதி கொண்ட நுழைவாயில்கள் உள்ள இடங்களை மேப் தெளிவாகக் காட்டும் என்பது குறிப்பிதடத்க்கது.

கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் 7 ரகசிய வசதிகள்..

6.டிராஃபிக் ஜாம்: இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் டிராஃபிக் ஜாம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் டிராஃபிக்கில் சிக்காமல் தப்பிக்க கூகுள் மேப்ஸ் உதவுகிறது. அதாவது கூகுள் மேப்ஸில் Traffic Layer என்பதை ஆன் செய்தால், எந்த சாலையில் நெரிசல் அதிகம் (சிவப்பு நிறம்) என்பதை லைவ்-ஆகக் காட்டும். எனவே நெரிசல் இல்லாத மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்ல முடியும்.

7.ஏஐ அம்சங்கள்: செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏஐ அம்சம் ஆனது தற்போது கூகுள் மேப்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மிகவும் உதவியாக இருக்கிறது. அதாவது திடீரென மழை பெய்தால், அருகில் உள்ள பாதுகாப்பான கஃபேக்களை அதுவே பரிந்துரைக்கும். பின்பு வானிலை மற்றும் சாலை நிலவரத்திற்கு ஏற்ப உங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கக் கூகுள் மேப்ஸில் உள்ள ஏஐ அம்சம் உதவியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps has 7 smart features that you may not know about: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X