Home
News

சத்தமின்றி ஐந்து புதிய அம்சங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்த Google Maps.. என்னென்ன தெரியுமா?

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது இதில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் அவ்வப்போது இந்த மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்களைச் சேர்த்த வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்தில் பயனுள்ள ஐந்து அம்சங்கள் இந்த செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஃபிளைஓவர் அலர்ட் (Flyover Alerts): நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.

சத்தமின்றி ஐந்து புதிய அம்சங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்த Google Maps!

இந்நிலையில் இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும் என்கிற கூகுள் நிறுவனம்.

ஆனாலும் இந்த வசதியானது தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்டு ஆட்டோ பயனர்களுக்கு இன்றும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்கிறது கூகுள். IOS பயனர்கள் மற்றும் ஆப்பிள் கார்பிளே பயனர்கள் இந்த வசதியைப் பெற இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஃபிளைஓவர் அலர்ட் வசதியானது 40 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியானது அனைத்து நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமின்றி ஐந்து புதிய அம்சங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்த Google Maps!

குறுகலான பாதையை தவிர்த்தல் (Avoiding Narrow Roads): வழக்கமான பாதையில் செல்லாமல் புதிய பாதையில் செல்லும் போது சில நேரம் குறுகலான பாதைகளில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும். இதனைத் தவிர்க்க புதிய வசதியைக் கூகுள் மேப்ஸ் கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த வசதியின் மூலம் நாம் செல்லும் பாதையில் குறுகலான இடம் இருக்கிறதா என்பதைக் கணித்து மேப்ஸ் நமக்குச் சொல்லும்.

அதாவது இந்த வசதியை ஏஐ (AI) மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கூகுள். குறிப்பாக ஏஐ வசதியானது சாட்டிலைட் மேப்ஸ், ஸ்ட்ரீட் வியூ படங்கள் மற்றும் ஒரு சாலை குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து அது குறுகலான பாதையா இல்லையா என்பதனை பயனாளர்களுக்குக் கணித்துச் சொல்லுமாம். மேலும் இந்த வசதி இந்தியாவில் சில முக்கியமான நகரங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகமாகும் என்ற கூறப்படுகிறது.

சாலைப் பணிகள்: கூகுள் மேப்ஸ் செயலியில் ஏற்கனவே இந்த சாலை பணிகள் சார்ந்த வசதிகள் உள்ளது. மேலும் இதனை மெருகேற்றியிருக்கிறது கூகுள். அதன்படி நாம் பயணிக்கும் சாலையில் விபத்துகள் ஏற்பட்டிருந்தாலோ அல்லது சாலைப் பணிகள் நடைபெற்று வந்தாலோ இந்த வசதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக முன்பைவிட இந்த வசதியானது மிகவும் துல்லியமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது கூகுள்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Locating EV Charging Stations): இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயனாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், எங்கெல்லாம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்கள் இருக்கின்றன என்கிற தகவலை இனி மேப்ஸ் மூலம் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் சார்ஜரின் இருப்பிடம் பற்றி தகவல் மட்டுமின்றி அங்கு என்ன விதமான பிளக் டைப் இருக்கிறது. தற்போது அது பயன்பாட்டில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவலையும் வழங்கும் கூகுள் மேப்ஸ்.

இந்த வசதியை வழங்குவதற்குக் கூகுள் நிறுவனம் ஏத்தர், எலெக்ட்ரிக்பே, கசாம், ஸ்டாட்டிக் போன்ற வாகன சார்ஜிங் கட்டமைப்பை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் 8000-ககு அதிகமான சார்ஜிங் ஸ்டேஷன் குறித்து மேப்ஸ் மூலம் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

சத்தமின்றி ஐந்து புதிய அம்சங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்த Google Maps!

மெட்ரோ டிக்கெட் புக்கிங் (Booking Metro Tickets): ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பொது போக்குவரத்து வசதியை கூகுளில் நாம் தேடுவோம். அப்படித் தேடும்போது நாம் செல்ல வேண்டிய பாதையில் மெட்ரோ வசதி இருந்தால் கூகுள் மேப்ஸ் மூலம் நாம் மெட்ரோ டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்குவேண்டி நம்ம யாத்ரி மற்றும் ONDC ஆகியவற்றுடன் கைகோர்த்திருக்கிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக மெட்ரோ டிக்கெட் எடுக்கும் போது, அதற்கான கட்டணத்தைக் கூட கூகுள் மேப்ஸ் மூலம் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளது கூகுள் நிறுவனம். தற்போது கொச்சி, சென்னை போன்ற நகரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் மற்ற மெட்ரோ நகரங்களில் இந்த வசதி கொண்டுவரப்படும்.

photo courtesy: autox.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps getting five new features in India: Flyover Alert, Metro Ticket Booking and more Added
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X