Home
News

கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புதிய அம்சம்.!

இதற்குமுன்பு இந்த செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டது.

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இப்போது கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இது கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் தான் வெளிவந்துள்ளது.

கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புதிய அம்சம்.!

இதற்குமுன்பு இந்த செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டது, ஆனால் தற்சமயம் புதிய போக்குவரத்து நெரிசல் அம்சத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

 ஐஒஎஸ்

ஐஒஎஸ்

இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் சேர்க்ப்பட்டிருக்கும் நிலையில், ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேக கட்டுப்பாட்டு

வேக கட்டுப்பாட்டு

கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் விபத்துகள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது, இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிப்போர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இந்த வசதியை கிளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

வேறு பாதையில் செல்ல வேண்டுமா?

வேறு பாதையில் செல்ல வேண்டுமா?

அதேசமயம் மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துகளையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது, இதனால் அதே வழியில்
வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு
பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடியும் செய்து கொள்ளலாம்.

வெர்ஷன் 10.12.1

வெர்ஷன் 10.12.1

இப்போது வெளிவந்துள்ள இந்த புதிய ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டுமே இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Google-Maps-for-Android-Now-Lets-You-Report-Traffic: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X