தைவான் இரகசிய இராணுவ தளத்தை அம்பலப்படுத்திய கூகுள்மேப்ஸ்!

இப்போதைக்கு அந்த புதிய வரைபடங்கள் இன்னும் கூகுள் மேப்ஸ் செயலியில் காணப்படுகின்றன.

|

கூகுள் எர்த் 3D மேப்ஸ் சமீபத்தில் செய்த அப்டேட்டில் தற்செயலாக தைவான் நாட்டின் இரகசிய இராணுவ தளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில் சில இடங்கள் முப்பரிமாண வடிவில் முழுமையாக விவரங்களை உள்ளடக்கியுள்ளது. பாட்ரியாட் ஏவுகணைகள் உள்ள இடம் மற்றும் தைவானின் தேசிய பாதுகாப்புப் பணியகம் ஆகியவையும் இதில் அடங்கும்.

தைவான் இரகசிய இராணுவ தளத்தை அம்பலப்படுத்திய கூகுள்மேப்ஸ்!

தைபே, நியூ தைபே, டாயாயுன், மற்றும் தாய்சூங் ஆகிய நகரங்களில் உள்ள பொது இடங்களை காண்பிப்பதற்காக இந்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. இந்த கூகுளின் இணைந்து பணியாற்றி இந்த புதிய மேப்களை மறைப்பதற்காக தைவான் அதிகாரிகள் ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர்.

இப்போதைக்கு அந்த புதிய வரைபடங்கள் இன்னும் கூகுள் மேப்ஸ் செயலியில் காணப்படுகின்றன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் எதிர்காலத்தில் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு தைவான் இராணுவம் ஆய்வுகள் நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரகசிய இராணுவ தளத்தை முப்பரிமாண முறையில் கூகுள் நிறுவனம் பொதுவெளியில் வெளிப்படுத்தியது மிகப்பெரிய தவறாக இருந்தாலும், இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். " உண்மையில் இரகசியமான பகுதிகள் அனைத்தும் அந்த கட்டமைப்புகளுக்கு உள்ளே உள்ளன. அவற்றை முப்பரிமான வரைபடங்கள் (3D மேப்ஸ்) மூலம் வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று" என தைவான் இராணுவ அமைச்சர் யென் டிஃபா தெரிவித்துள்ளார்.

தைவான் மற்றும் கூகுள் இடையே இது போன்ற மேப்பிங் தரவுகள் பிரச்சனை ஏற்கனவே ஒருமுறை நடைபெற்றுள்ளது. 2016ல் தென் சீன கடல் பகுதியில் தைபிங் தீவில் உள்ள இராணுவ தளத்தை சென்சார் செய்யுமாறு கூகுளை தைவான் கேட்டுக்கொண்டது.

Best Mobiles in India

English summary
Google Maps expose Taiwanese secret military base in 3D view : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X