அடிக்கடி கூகுள் மேப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ்-வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் உண்மை.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் தொடர்ந்து கூகுள் மேப்ஸ் வசதியில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில்5 புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ்-இல் அறிமுகம் செய்ய உள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..

சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி

சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி

சுங்கக் கட்டணச் சாலைகளில் சென்றால் எவ்வளவு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக கூகுள் முதல் முறையாக கூகுள் மேப்ஸில் சுங்கக் கட்டணங்களை வெளியிடுகிறது. நீண்டதூர பயணங்களில் பல சுங்கச்சாவகளை கடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த வசதி கண்டிப்பாக மிகவும் உதவியாக இருக்கம்.

எலும்பும் சதையுமாக இருந்த டைனோசர் கால்- 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கு., விண்கல் தான் காரணமா?எலும்பும் சதையுமாக இருந்த டைனோசர் கால்- 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கு., விண்கல் தான் காரணமா?

கட்டணமில்லா பாதை

கட்டணமில்லா பாதை

ஒருவேளை நீங்கள் கட்டணம் செலுத்தி பயணம் செல்ல விரும்பவில்லை என்றால், உங்களுக்கு Take the toll-free route வசதியை கொண்டுவர உள்ளது கூகுள் மேப். குறிப்பாக சுங்கச் சாவடிகள் உள்ள வழித்தடங்களை முற்றிலும் தவிர்க்க இந்த வசதி பயன்படும். குறிப்பாக கூகுள் மேப்ஸில் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Avoid Tolls என்பதை கிளிக் செய்வதன் மூலம் இதைப்பயன்படுத்தலாம்.

இந்தியாவில் 50எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! விற்பனை தேதி?இந்தியாவில் 50எம்பி கேமராவுடன் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! விற்பனை தேதி?

சிக்னல்களில் இருக்கும் விளக்குகள்

சிக்னல்களில் இருக்கும் விளக்குகள்

போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் விளக்குகளை இனிமேல் கூகுள் மேப்ஸ் உவியுடன் பார்க்க முடியும். அதேபோல் சாலையின் அகலம்,வடிவம்,தடுப்புச்சுவர்கள் போன்ற அனைத்தையும் புதிய அப்டேட்கொண்டுவருகிறது. கண்டிப்பாக பயணங்களை எளிமையாக கூகுளின் இந்த புதிய அதிக உதவியாக இருக்கும்.

ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு பயனுள்ள வசதி

ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு பயனுள்ள வசதி

ஆப்பிள் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வசதிகளை வழங்க கூகுள் முயற்சி செய்து வருகிறது. அதன்படி ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப்ஸை எளிமையாக்கும் அணுகும் வசதியை புதிய அப்டேட் வாயிலாகக் கொண்டுவர உள்ளது. அதாவது பிரபலமான Siri சேவையை பயன்படுத்தி Take me home என்று சொன்னால், தானாக வீட்டிற்கு செல்ல வேண்டிய போக்குவரத்து நெரிசல் இல்லாத வழியை கூகுள் மேப்ஸ் ஆப்பிள் வாட்சில் காட்டும் என்று கூறப்படுகிறது. ஐஓஎஸ் பயனர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

Samsung Galaxy M33 5G இன்று முதல் விற்பனையில்.. இந்த போனை வேண்டானு மட்டும் சொல்லமாட்டீங்க..Samsung Galaxy M33 5G இன்று முதல் விற்பனையில்.. இந்த போனை வேண்டானு மட்டும் சொல்லமாட்டீங்க..

ஐபோன் திரையில் கூகுள் மேப்ஸ்

ஐபோன் திரையில் கூகுள் மேப்ஸ்

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வேண்டி கூகுள் மேப்ஸ் விட்ஜெட்ஸ் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் செயலியைப் பயன்படுத்தும்போது வெளியே வந்துவிட்டால், நாம் போக வேண்டிய பாதைய முகப்பு திரையில் பார்க்க முடியாது. ஆனால் ஆண்ட்ராய்டு போன்களில் மேப்ஸைவிட்டு வெளியே வநதாலும், முகப்பு திரையில் அந்த வழிகாட்டும் வசதி பின் செய்யப்படும். இதே வசதியை ஐபோன் வாடிக்கையளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. விரைவில் வரும் அப்டேட்கள் மூலம் இந்த அம்சம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps bringing 5 key features soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X