சபாஷ்: இனி கூகுள் மேப் செயலியில் இதையும் தெரிந்துக் கொள்ளலாம்?

|

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் டிராபிக் சிக்னல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயனர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சேவை

பயனர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சேவை

கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும், இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது.

கூகுள் மேப்ஸ் காண்பிக்கும் வசதி

கூகுள் மேப்ஸ் காண்பிக்கும் வசதி

அதன்படி கோவிட்-9 ஊரடங்குக்கு மத்தியில் இந்தியாவின் 30 நகரங்களில் உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை கூகுள் மேப்ஸ் காண்பிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. இந்த நிவாரண மையங்களின் இருப்பிட விவரங்களை வழங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் நெருக்குமாக செயல்படுவதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

கூடுதல் தனியுரிமை கொள்கை

கூடுதல் தனியுரிமை கொள்கை

கூடுதல் தனியுரிமையை வழங்குவதற்கும், அதன் பயனர்களின் தரவைப் பாதுகாப்பதற்கும் கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய முயற்சியைக் கையில் எடுத்து அதை அறிமுகப்படுத்தியது. கூகிள் தனது கூகிள் வரைபடங்களில் (Google Maps) சேவையின் கீழ் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'மறைநிலை பயன்முறையை (Incognito Mode) சேவையை அறிமுகப்படுத்தியது.

கூகுள் மேப்ஸ் பயனர்கள்

கூகுள் மேப்ஸ் பயனர்கள்

இந்த புதிய சேவையின்படி கூகுள் மேப்ஸ் பயனர்கள், தங்கள் கூகுள் மேப் செயலியில் தேடும் இடங்களின் விபரங்கள் எதுவும் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் சேமிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக உங்கள் கூகுள் அக்கௌன்ட்டில் மட்டுமில்லாமல் உங்களின் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

கூகுள் தொடர்ந்து புது வசதிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் புது வசதிகள் ஒன்றையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டிராபிக் சிக்னல் இருப்பது குறித்த விவரங்கள்

டிராபிக் சிக்னல் இருப்பது குறித்த விவரங்கள்

கொரோனா பரவல் தொடங்க ஆரம்பித்ததன் முதல் கட்டுப்பாடுகள் பகுதிகளை அறிந்துக் கொள்ளும் வகையிலான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் விரைவில் கூகுள் மேப்ஸ் செயலியில் டிராபிக் சிக்னல் இருப்பது குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளும் வகையிலான புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் கூகுள் தரப்பில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பொதுவாக ஆண்ட்ராய்ட் தரப்பின் புதிய அம்சங்கள்

பொதுவாக ஆண்ட்ராய்ட் தரப்பின் புதிய அம்சங்கள்

பொதுவாக ஆண்ட்ராய்ட் தரப்பின் புதிய அம்சங்கள் அறிமுகம் உள்ளிட்ட விஷயங்களை வெளியிடும் ட்ராய்டுலைஃப் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலில் முதற்கட்டமாக அமெரிக்காவில் சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள சாலைகளில் டிராபிக் சிக்னல் இருக்கும் விவரங்களை கொண்டுவரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

படிப்படியாக நாடு முழுவதும் இந்த அம்சம்

படிப்படியாக நாடு முழுவதும் இந்த அம்சம்

அமெரிக்காவில் அறிமுகத்திற்கு பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் இந்த அம்சம் கொண்டுவரப்படும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக டிராபிக் இருந்தால் அதை சிவப்பு வண்ணத்தில் குறியிட்டு நமக்கு காட்டும் இந்த அம்சம் அறிமுகமானால் டிராபிக் சிக்னல் குறித்த விவரங்களையும் காட்டும்.

Best Mobiles in India

English summary
Google Maps app tests new feature to showing traffic lights

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X