புதிய ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் கூகுள் புதிய மேப் அப்ளிகேசன்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஐஒஎஸ் இயங்கு தளத்தைக் களமிறக்கியது. தற்போது இந்த இயங்கு தளத்தில்தான் ஆப்பிளின் அனைத்து மொபைல் தயாரிப்புகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்த புதிய ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்காக கூகுள் நிறுவனம் ஒரு புதிய மேப் அப்ளிகேசனைத் தயாரித்து வருகிறது. கடந்த 2007லிலிருந்து ஐபோனில் இயங்கும் மேப் அப்ளிகேசனை கூகுள் வழங்கி வருகிறது.
தற்போது புதிய ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய மேப் அப்ளிகேசனைத் தயாரித்து ஆப்பிள் ஸ்டோரில் சமர்பித்திருக்கிறது. ஆப்பிள் இந்த மேப் அப்ளிகேசனை ஏற்றுக் கொண்டால் இந்த புதிய மேப் அப்ளிகேசன் களம் இறங்கிவிடும்.
2 நாள்களுக்கு முன்பு நோக்கியா நிறுவனம் தனது ஹியர் என்ற புதிய மேப் அப்ளிகேசனை அறிமுகம் செய்து வைத்தது. இன்னும் சில வாரங்களில் இந்த நோக்கிய மேப் அப்ளிகேன் ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். இந்த மேப் டர்ன் பை டர்ன் நாவிகேசன் மாடலில் வருகிறது.
இந்த டர்ன் பை டர்ன் நாவிகேசன் மாடலில் வரும் மேப் அப்ளிகேசனை ஏற்கனவே இந்தியாவில் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் கூகுள் களம் இறக்கி இருக்கிறது. ஐஒஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த புதிய கூகுள் மேப் அப்ளிகேசனும் இதே மாடலில் வரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications