Home
News

கூகுள் அறிமுகம் செய்த புதிய அம்சம்.. இனி டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி அனைத்து இடங்களிலும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்கு மிகப் பெரிய உதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

அதேபோல் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் ஸ்ட்ரீட் வியூ அம்சம் மூலம் நீங்கள் விரும்பிய பகுதியின் 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம். அதுவும் நீங்கள் தேடிய இடத்தைப் பற்றி துல்லியமாகத் தெரிந்துகொள்ள இது உதவும். இந்நிலையில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை விட மிகவும் சிறப்பான அம்சத்தை கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

கூகுள் அறிமுகம் செய்த புதிய அம்சம்..

அதாவது கூகுள் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் ஆனது 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு இடத்தை முன்பு எப்படி இருந்தது என்று டைம் டிராவல் செய்து பார்க்க அனுமதிக்கிறது. குறிப்பாக இதன் மூலம் பயனர்கள் பல்வேறு இடங்களில் வரலாற்று காட்சிகளைக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றிற்கு இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 30 வருடங்களுக்கு முன்பு அந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதை எளிமையாக ஆராய முடியும். அதுவும் இந்த டைம் டிராவல் அம்சம் ஆனது பயனர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

அதன்படி ஒரு கட்டடம், தெரு அல்லது ஒரு நகரம் முதன் முதலில் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக லண்டன், பாரிஸ் போன்ற புகழ்பெற்ற நகரங்களைக் கூட நீங்க ஆராயலாம்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் எர்த் சென்று அதில் நீங்கள் ஆராய விரும்பும் இடத்தை தேர்ந்தெடுங்கள். அதன்பின்பு லேயர்கள் விருப்பத்திற்குச் ( layers option) சென்று டைம் லேப்ஸைத் ( time lapse) தேர்ந்தெடுக்கவும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடந்த காலத்தில் அந்த இடம் எப்படி இருந்தது என்பதை இவை காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் மேப்ஸ் செயலியில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

பிளைஓவர் அலர்ட்: நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் (Flyover Alerts) என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும்.

ட்ராஃபிக் அப்டேட்ஸ்: கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள ட்ராஃபிக் அப்டேட் தகவல் மூலம் நீங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதாவது இது எந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது போன்ற தகவல்களை முன்கூட்டியே வழங்குவதால், அந்த வழிகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலியில் விரைவில் பல புதிய அம்சங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது கூகுள். குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

source 1

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps and Google Earth now allow us to see what a city looked like 30 years ago
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X