அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!

|

கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் கூகுள் மேப் வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக மக்கள் இந்த கூகுள் மேப் வசதியை அதிகமாகப் பயன்படுத்தக் காரணம் என்னவென்றால், முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். மேலும் இது ஜிபிஎஸ் அடிப்படையிலான நேவிகேஷன் தளங்களில் ஒன்றாகும். பின்பு இதில் அவ்வப்போது பயனர்களுக்கு புதிய புதிய அப்டேட் கிடைக்கிறது.

அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா?

அதேபோல் இந்த கூகுள் மேப்ஸ்-க்கு மாற்றாக பல்வேறு செயலிகள் இருக்கின்றன. பின்பு இதுபோன்ற செயலிகளையும் மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இப்போது கூகுள் மேப்ஸ்-க்கு மாற்றாக இருக்கும் செயலிகளையும், அவற்றின் அம்சங்களையும் இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

Mappls

கூகுள் மேப்ஸ் போன்று இந்த Mappls செயலியைக் கூட மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ரியல் டைம் ட்ராஃபிக் போன்ற நிலையான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த Mappls. இதுதவிர வேகத்தடைகள், பள்ளங்கள், தெருவிளக்கு இல்லாத இடங்கள் போன்ற சிக்கல் நிறைந்த இடத்தை கண்டறிந்து வழங்கும் அருமையான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த Mappls.

அதேபோல் சமீபத்தில் இதன் டெவலப்பவர்கள் ஜங்ஷன் வியூ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளனர். இது முன்கூட்டியே வாகன ஓட்டுநர்களுக்குச் சந்திப்புகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து அறிய உதவுகிறது. குறிப்பாக Mappls சிக்கலான முகவரிகளை கூட கண்டறிய உதவும் என்று கூறப்படுகிறது.

Waze Navigation and Live Traffic செயலி

Waze Navigation and Live Traffic செயலி ஆனது ஆபத்தான பகுதிகள் குறித்த எச்சரிக்கைகள். போக்குவரத்து நெரிசல், போலீஸ் எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. குறிப்பாக இது பயனர்களிடம் இருந்து தரவைச் சேகரிக்கிறது மற்றும் விரைவான, பாதுகாப்பான வழியை வழங்க அந்த தரவைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா?

இந்த Waze Navigation and Live Traffic செயலியில் பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ள பெட்ரோல் நிலையங்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். பின்பு இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Sygic GPS Navigation and Maps செயலி

கூகுள் மேப்ஸ் போன்றே இந்த Sygic GPS Navigation and Maps வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதவது இந்த செயலியை 200 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆஃப்லைன் முறையில் 3டி மேப்ஸ் டவுன்லோடு செய்ய உதவுகிறது. அதாவது இதை நெட் இல்லாமல் பயன்படுத்தலாம்.

குரல் வழிகாட்டுதல் முதல் ட்ராஃபிக் பற்றிய அனைத்து நிகழ்நேரத் தகவல்களையும் வழங்குகிறது இந்த Sygic GPS Navigation and Maps செயலி. கிட்டத்தட்ட கூகுள் மேப்ஸ் வசதியில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Sygic GPS Navigation and Mapsசெயலியில் உள்ளது.

அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா?

ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான அம்சம், ரியல் வியூ நேவிகேஷன், சரியான பாதையில் செல்ல உதவும் டைனமிக் லேன் அசிஸ்ட் போன்ற தரமான அமசங்களை கொண்டுள்ளது இந்த Sygic செயலி. ஆனால் மேலே குறிப்பிட்ட இந்த முக்கிய அம்சங்கள் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps Alternatives Available with Unique Features: Here's the List: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X