Home
News

இந்தியா: கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புத்தம் புதிய அம்சங்கள்.!

கூகுள் நிறுவனம் அதன் மேப்ஸ் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்கி வருகிறது, சில நாட்களுக்கு முன்பு பேருந்து, நேரலை, ரயில் இதர போக்குவரத்து வழிமுறைகள் பற்றிய விவரங்களை மேப்ஸ் செயலியில் கூகுள்
வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ் செயலி

கூகுள் மேப்ஸ் செயலி

இன்று கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேக எக்ஸ்ப்ளோர் டேப், புதிய ஃபார் யு என்ஸ்பீரியன்ஸ் மற்றும் டைனிங் போன்ற அம்சங்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எக்ஸ்ப்ளோர் டேப்:

எக்ஸ்ப்ளோர் டேப்:

எக்ஸ்ப்ளோர் டேப் அம்சத்தின் சிறப்பு என்னவென்றால், ரெஸ்டாரான்ட், பெட்ரோல் பம்ப், ஏடிஎம், ஆஃபர்ஸ், ஷாப்பிங், ஓட்டல் மற்றும் மருந்தகங்களை தேட முடியும். குறிப்பாக மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மூலம் பல முக்கிய நகரங்களில் உள்ள வியாபர மையங்களை கூகுள் மேப்ஸ் கண்டறிந்து கொள்ளும் பின்பு நகரங்களில் தனித்தனியாக பரிந்துரைகளை வழங்கும்.

 ஃபார் யு என்ஸ்பீரியன்ஸ்:

ஃபார் யு என்ஸ்பீரியன்ஸ்:

ஃபார் யு என்ஸ்பீரியன்ஸ் அம்சத்தை பொறுத்தவரை புதிய ரெஸ்டாரன்ட்கள், டிரெண்டிங் இடங்கள் மற்றும் ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்ப தரமான பரிந்துரைகளை வழங்கும். இது யுவர் மேட்ஸ் ஸ்கோர் பயன்படுத்தி மெஷின் லெர்னிங் மூலம் கூகுள் அறிந்திருக்கும் தகவல்களை வைத்து நீங்கள் ஏற்கனவே சென்று வந்த இடங்களுக்கு வழங்கிய விருப்பங்கள் மற்றும்
மதிப்பீடுகளை கொண்டு பரிந்துரைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பயன்படுத்தும் போது..

முதல் முறையாக பயன்படுத்தும் போது..

ஃபார் யு என்ஸ்பீரியன்ஸ் அம்சத்தை முதல் முறையாக பயன்படுத்தும் போது, நீங்கள் விரும்பும் பகுதிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும், பின்பு உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப பரிந்துரைகளை கூகுள் வழங்கத்துவங்கும்.

முக்கிய நகரங்களில் இருக்கும் ரெஸ்டாரன்ட்

முக்கிய நகரங்களில் இருக்கும் ரெஸ்டாரன்ட்

மேலும் எக்ஸ்ப்ளோர் டேபில் உள்ள புதிய ஆஃபர்ஸ் பகுதியில் சென்னை, கொல்கத்தா, கோவா, ஆமதாபாத், டெல்லி, ஐமராபாத், சண்டிகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் ரெஸ்டாரன்ட் மற்றும் அவற்றில் கிடைக்கும் சலுகைகளை பற்றி தெரிந்துகொள்ளமுடியும்.

ஆஃபர்ஸ் அம்சம்-ஆண்ட்ராய்டு :

ஆஃபர்ஸ் அம்சம்-ஆண்ட்ராய்டு :

கூகுள் மேப்ஸ் செயலியில் இந்த சேவையை வழங்குவதற்கென கூகுள் நிறுவனம் ஈசிடின்னர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செய்துள்ளது, முதற்கட்டமாக 4000 ரெஸ்டாரன்ட்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஆஃபர்ஸ் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு செயலியில் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Maps adds 3 new features in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X