இந்தியா: ஷாப்பிங் சேவையை துவங்கியது கூகுள் நிறுவனம்.!

மேலும் ஷாப்பிங் சேவை தற்போது ஒரு சோதனை முயற்சி எனபதால் கூகுள் அதன் மூலம் வருவாய் ஈட்டும் எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தவில்லை.

|

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்த ஷாப்பிங் சேவையை இந்தியாவில் தொடங்கி, மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்க உள்ளது.

இந்தியா: ஷாப்பிங் சேவையை துவங்கியது கூகுள் நிறுவனம்.!

கூகுள் நிறுவனத்தின் இந்த ஷாப்பிங் சேவையில் ஒரே நேரத்தில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் உள்ள பொருட்களைத் தேடி, ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பின்பு வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இந்த கூகுள்ஷாப்பிங் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்த தளத்தில் வாங்க முடியும்.

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ்

இதுவரை ஒரு பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட இ-காமர்ஸ் தளங்களுக்கு சென்று எங்கு குறைவாக விற்கிறார்கள் என்று தேடி வந்தோம், இனி அந்த கவலை இல்லை, இந்த கூகுள் ஷாப்பிங் உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு
செய்த பிறகு, சிறந்த விலையில் அதை விற்பனை செய்யும் தளங்களின் பட்டியலையும் கொடுக்கும்.

 டிரெண்டிங் பொருட்கள்

டிரெண்டிங் பொருட்கள்

கூகுள் நிறுவனம் துவங்கியுள்ள இந்த சிறப்பு வலைதளம், ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தேடுதல் பக்கமாக மட்டும் இல்லாமல், அதிகளவு விற்பனையாகி வரும் டிரெண்டிங் பொருட்களையும் பட்டியலிடும்.

குறைந்த விலை

குறைந்த விலை

பின்பு எந்தத் தளத்தில் நாம் வாங்க இருக்கும் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள் எனக் கண்டறிந்து அதைத் தேர்வு செய்யலாம், பின்னர் ஒரே கிளிக்கில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட், அமேசான்

பிளிப்கார்ட், அமேசான்

பிளிப்கார்ட், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், சிறு இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பட்டியலிடுகிறது இந்த கூகுள் ஷாப்பிங் தளம்.

வருவாய்

வருவாய்

மேலும் ஷாப்பிங் சேவை தற்போது ஒரு சோதனை முயற்சி எனபதால் கூகுள் அதன் மூலம் வருவாய் ஈட்டும் எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தவில்லை. ஆனால் வரும் காலத்தில் இதன் மூலம் வருவாய் ஈட்டும் திட்டமும் கூகுளுக்கு
உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google makes shopping easier for Indian users with new search features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X