அசரவைக்கும் சுந்தர் பிச்சை.. Google-ன் புதிய அம்சம் இனி இந்த போன்களுக்கும் கிடைக்கும்.. உடனே செக் பண்ணுங்க
சுந்தர் பிச்சை தலைமையில் இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கடந்த ஆண்டு மேஜிக் எடிட்டர் (Magic Editor) எனும் ஏஐ (AI) அம்சத்தை அறிமுகம் செய்தது.
முதலில் இந்த மேஜிக் எடிட்டிங் டூல் ஆனது பிக்சல் 8 (Pixel 8) மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Pixel 8 Pro) போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மேஜிக் எடிட்டர் அம்சம் ஆனது மேலும் பல ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் போட்டோஸ் சேவையின் கீழ் அணுக கிடைக்கும் மேஜிக் எடிட்டர் (Magic Editor)ஆனது உங்களது புகைப்படங்களிலிருந்து தேவையற்ற பொருட்களை அல்லது மோசமான அல்லது தேவையில்லாத அல்லது குறுக்கே வந்த ஃபோட்டோபாம்பர்களை (Photobombers) ஒரு சில கிளிக்குகளில் அகற்ற உதவும் ஒரு ஏஐ அம்சம் ஆகும்.
அதேபோல் மேஜிக் எடிட்டர் மூலம் வானத்தைப் பிரகாசமாகவும், குறைவான மேகமூட்டமாகவும் மாற்றலாம். பின்பு புகைப்படங்களில் இருக்கும் சிக்கலான திருத்தங்களைச் செய்ய மேஜிக் எடிட்டர் பயன்படுகிறது. இதுதவிர பல்வேறு அம்சங்கள் இந்த மேஜிக் எடிட்டரில் உள்ளன. இந்த அம்சம் அனைவருக்கும் கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும்.

குறிப்பாக முதலில் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ போன்களுக்கு தான் இந்த மேஜிக் எடிட்டர் அம்சம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கூகுள் பிக்சல் 6 (Pixel 6) மற்றும் கூகுள் பிக்சல் 7 (Pixel 7) போன்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன்களுக்கு கடந்த மே 15-ம் தேதி இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தான் வழங்கப்பட்டுள்ளது.
எனவே உங்களிடம் கூகுள் பிக்சல் 7 அல்லது பிக்சல் 6 போன்கள் இருந்தால் கூகுள் போட்டோஸ் (Google Photos)அப்டேட் செய்து இந்த மேஜிக் எடிட்டர் அம்சத்தைப் பெறலாம். குறிப்பாக இந்த மேஜிக் எடிட்டர் அம்சம் ஆனது தற்போது பிக்சல் போன்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கு இன்னும் இந்த அம்சம் வழங்கப்படவில்லை.
அதேபோல் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது. அதாவது கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளார்கள்.

அதுவும் சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்கக் கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








