Home
News

ரூ.17,000 மதிப்புள்ள Gemini Pro சந்தா 1 ஆண்டுக்கு FREE.. Google அறிவித்துள்ள புதிய ஸ்டூடெண்ட் ஆபர்!

ரூ.17,000 மதிப்புள்ள பிரீமியம் ஏஐ சேர்ச் அசிஸ்டன்ட் ஆன பெர்பிளெக்ஸ்சிட்டி ப்ரோ ஏஐ-க்கான (Perplexity Pro AI) ஒரு வருட இலவச சந்தாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ் அறிமுகமான வேகத்தில், இந்தியாவில் ஜெமினி ப்ரோவிற்கான இலவச சந்தாவை வழங்கும் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட சந்தாவை வாங்கினால் ரூ.19,500 என்கிற விலையில் கிடைக்கும் ஜெமினி ப்ரோ சந்தாவானது இப்போது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜெமினி என்பது கூகுளின் ஏஐ அசிஸ்டென்ட் ஆகும். கட்டண சந்தா அடைப்படையின் கீழ் கிடைக்கும் ஜெமினி ப்ரோ ஆனது - பயனர்கள் மேம்பட்ட ஏஐ திறன்களை அணுகவும், கூகுள் கிளவுட் ஸ்டோரேஜை பெறவும் அனுமதிக்கிறது.

ரூ.17,000 மதிப்புள்ள Gemini Pro சந்தா 1 ஆண்டுக்கு FREE!

ஆனால் இப்போது இந்த ஜெமினி ப்ரோ இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கான வரையறுக்கப்பட்ட கால சிறப்பு மாணவர் சலுகையாகும். இதன் கீழ், பயனர்கள் கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்திற்க்கான ஒரு வருட சந்தாவைப் பெறுவார்கள். இந்த சலுகையை பெறவிரும்பும் மாணவர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்காளாக இருக்க வேண்டும்.

https://gemini.google/students/?hl=en-IN

ஜெமினி ஆப் ஆனது மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடம் செய்ய, தேர்வுகளுக்குத் தயாராக, எழுதுவதில் உதவி செய்ய மற்றும் பலவற்றை செய்ய உதவும். மேலும் ஜெமினி ப்ரோ சந்வானது மாணவர்களுக்கு 2டிபி ஸ்டோரேஜ், வியோ 3-க்கான அணுகல் மற்றும் அனைத்து கூகுள் ஆப்களிலும் ஜெமினி ஏஐ-க்கான ஒருங்கிணைப்பை ஆகியவற்றை கொண்டுவரும்.

2டிபி ஸ்டோரேஜ் ஆனது மாணவர்கள் தங்கள் முக்கியமான பைல்களை கிளவுட்டில் வைத்திருக்க அனுமதிக்கும். இந்த சலுகையை செப்டம்பர் 15, 2025 க்கு முன்பு பெறலாம். கூகுள் இந்த சலுகையை மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது என்பதையும் இது நிபுணர்களுக்கானது அல்ல என்பதையும் இங்கே மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்

இதுகுறித்த ஒரு வலைப்பதிவில் கூகுள் நிறுவனம் ஆனது, மாணவர்கள் டீப் ரிசர்ச் மூலம் பெர்சனல் ரிசர்ச் அசிஸ்டென்ட்டை பெறலாம், நோட்புக்எல்எம்-இல் 5 மடங்கு அதிக வரம்புகளுடன் நோட்ஸ்களை ஒழுங்கமைக்கலாம், ஜெமினி லைவ் அம்சத்தை பயன்படுத்தலாம், ஜெமினி மற்றும் வியோ 3 உடன் டெக்ஸ்ட் ல்லது புகைப்படங்களிலிருந்து டைனமிக் வீடியோக்களை உருவாக்கலாம், மேலும் ஜிமெயில், டாக்ஸ், ஷீட்கள் உட்பட தங்களுக்கு பிடித்த கூகுள் ஆப்களில் நேரடியாக ஏஐ உதவியைப் பெறலாம் என்று கூறியுள்ளது.

ஏர்டெல் வழங்கும் பெர்பிளெக்ஸ்சிட்டி ப்ரோ ஏஐ-க்கான இலவச சந்தாவை பொறுத்தவரை, இது ரூ.449 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது. ஜெமினி ப்ரோ சந்தாவை போல் இல்லாமல் இது அனைவருக்கும் அணுக கிடைக்கும். இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மேம்பட்ட ஏஐ டூல்களை (Advanced AI Tools) அணுக உதவுகிறது.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் வழியாக 22 க்கும் மேற்பட்ட ஓடிடி சேவைக்ளுக்கான அணுகல்களை வழங்குகிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கான (Airtel Xstream Play Premium) முழு அணுகலை பெறுகிறார்கள். இதன்கீழ் சோனி எல்ஐவி, லயன்ஸ்கேட் ப்ளே, ஆஹா, ஹோய்சோய், சௌபால் மற்றும் சன்என்எக்ஸ்ட் உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை 28 நாட்களுக்கு இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

மேலும் நீங்கள் 5ஜி கவரேஜ் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், இந்த பேக்கின் கீழ் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பை தாண்டி வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையையும் (Unlimited 5G Data Benefit) பெறுவீர்கள். ஸ்ட்ரீமிங், கேமிங் அல்லது வேலை தொடர்பான பயன்பாட்டிற்கு அதிவேக இண்டர்நெட் தேவைப்படும் பயனர்களுக்கு இது ஒரு முக்கியமான நன்மையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google limited time special student offer Gemini Pro Subscription Worth Rs 19500 Now Free For 1 Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X