கூகுள் லென்ஸ் அறிமுகம் செய்துள்ள ஆச்சரியப்படும் புதிய வசதி.!

கூகுளின் ஏஐ என்று கூறப்படும் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் புதிய வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது.

|

சமீபத்தில் நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டின்கூகுள் டெவலப்பர் கூட்டம் ஒன்றில் பல புதிய வசதிகள் மற்றும் அப்டேட்டுக்களை அறிவித்தது என்பது பலருக்கு தெரிந்ததே. இந்த புதிய வசதிகளில் கூகுளின் ஏஐ என்று கூறப்படும் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் புதிய வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. கூகுள் லென்ஸ் இந்த வசதியை மிகவும் சரியாக கையாண்டு வருகிறது.

கூகுள் லென்ஸ் அறிமுகம் செய்துள்ள ஆச்சரியப்படும் புதிய வசதி.!

2018ஆம் ஆண்டு கூகுள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த கூகுள் லென்ஸ் வசதி புதிய புரட்சியை உண்டாக்கிய நிலலியில் இதில் உள்ள யூஐ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது கூகுள் லென்ஸ் மூலம் பார்க்கப்படும் ஒரு பொருளின் உண்மை தன்மையை டெக்ஸ்ட் மூலம் அறிந்து கொள்வது என்பதே இந்த புதிய வசதி. இந்த புதிய வசதியை கூகுள் தன்னுடைய முக்கியமான தயாரிப்புகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டது.

கூகிள் லென்ஸை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதற்கு எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. கூகுள் அசிஸ்டெண்ட்டில் தோன்றும் பாப் அப்பில் லென்ஸை காணலாம். லென்ஸின் முந்தைய மேலோட்டமான யூஐ போலன்றி, ஒரு பொருளை பழைய தன்மையுடன் அல்லாமல் அதனை வட்டமிட்டு அதன் தெளிவற்ற தன்மையை போக்கி நமக்கு காட்டும்

பயனாளிகள் கூகுள் லென்ஸில் உள்ள ஆப்ஜெக்ட் மற்றும் டெக்ஸ்ட் என்ற டேப்பை ஆன் செய்தால் அதன் கீழ் லென்ஸ் மூலம் பார்க்கப்படும் பொருள் குறித்த விபரங்கள் வார்த்தைகளில் தோன்றும். இந்த புதிய கூகுள் லென்ஸ் வசதியின் முலம் தெரியாத ஒரு பொருளின் தன்மையை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் ஒரு டெக்ஸ்ட், புத்தகங்கள், தயாரிப்புகள், மீடியா, ஒரு புதிய இடம் மற்றும் பார்கோட் இவற்றையும் இந்த கூகுள் லென்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஒரு புதிய பொருளின் தன்மையை கூகுள் லென்ஸ் பயனாளி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த பொருளின் படம் மீது ஒரே ஒரு டேப் அழுத்திவது மட்டுமே போதுமானது. கூகுள் அந்த பொருளை புரிந்து கொண்டு உங்களுக்கும் புரிய வைக்கும். அதேபோல் கூகுள் லென்ஸ் வசதியை பின்பற்றுபவர்கள் அவர்கள் பார்க்கும் பொருள், அந்த பொருளின் வண்ணம், அதன் பயன்கள் உள்பட பல விஷயங்களை உங்களுக்கு கூகுள் டெக்ஸ்ட் வடிவில் கொடுகும். மேலும் இதில் உள்ள மூன்று டாட்டுக்களை அழுத்துவதன் மூலம் நாம் பார்க்கும் பொருளின் முழு விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

கூகுள் லென்ஸ் அறிமுகம் செய்துள்ள ஆச்சரியப்படும் புதிய வசதி.!

மேலும் தற்போது இதில் புகுத்தப்பட்டுள்ள புதிய அம்சம் என்னவெனில் ஒரே நேரத்தில் ஒரு பொருளுக்கு மேல் எத்தனை பொருளின் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் கூகுள் லென்ஸ் மூலம் பார்க்கப்படும் பல பொருட்கள் குறித்த முழு விபரங்கள் நமக்கு கிடைக்கும். ஸ்மார்ட் செலக்சன் மூலம் ஒரு பொருளின் தன்மையை டெக்ஸ்ட் மூலம் தெரிந்து கொள்வது என்பது உண்மையிலேயே கூகுள் லென்ஸ் பயனாளிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
Best Mobiles in India

English summary
Google lens will now be able to identify objects in Real-Time ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X