ஸ்கிரீன்ஷாட் மூலம் ஆன்லைன் தேடல்: கூகுள் லென்ஸ் அசத்தல்.!
கூகுள் லென்ஸ் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என தெரிந்ததால் தான் அதை விரும்புகிறோம். நிச்சயமாக இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும் கூகுள் லென்ஸ் அதன் களஞ்சியத்தில் மற்றொரு அம்சத்தைப் பெறலாம் என்று தெரிகிறது.

ஸ்மார்ட் ஸ்கிரீன் ஷாட்ஸ்
ஸ்கிரீன் ஷாட்களின் மூலம் பக்கங்களை தேடும் திறனை கூகுள் விரைவில் கொண்டு வரக்கூடும். சமீபத்தில் கூகுள் தேடல் செயலின் பதிப்பு 10.61-ஐ ஆராய்ந்த போது, அச்செயலியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'ஸ்மார்ட் ஸ்கிரீன் ஷாட்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற புதிய அம்சத்தை உருவாக்குவதில் கூகுள் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

ஸ்கிரீன் ஷாட்டை பகிர பயனர்களை அனுமதிக்கும்
பயனர் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்தவுடன், அது பல்வேறு பொத்தான்கள் திரையில் காண்பிக்கும். முதலாவது பேனா வடிவிலான 'எடிட்' பொத்தானை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் க்ராப் செய்வதற்கும் வரைவதற்கும் கருவிப்பட்டியைத் திறக்க அனுமதிக்கும். மேலும் பகிர் பொத்தான் மூலம் பல்வேறு சமூக வலைதள செயலிகளில் ஸ்கிரீன் ஷாட்டை பகிர பயனர்களை அனுமதிக்கும்.

மூன்றாவது பொத்தான்
இருப்பினும் மூன்றாவது பொத்தான் தான் மிகவும் சுவாரஸ்யமானது. அந்த புதிய லென்ஸ் பொத்தானை பயன்படுத்தி குறிப்பிட்ட ஸ்கிரீன் ஷாட் தொடர்பான விஷயங்களைப் பார்க்க பயனர்களை அனுமதிக்கும். ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னேசன்-ஐ பயன்படுத்தி, இணையதள பக்கங்கள் அல்லது அதுபோன்றவற்றில் ஸ்கிரீன்ஷாட்-ல் உள்ளவற்றை தேடலாம். மேலும் நான்காவது பொத்தான், பொதுவாக பகிர்வதற்கு பயன்படுத்தப்படும் செயலியை காண்பிக்கும்.

படங்களை சேமிப்பது எளிது
கோட்பாட்டளவில் இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள விஷயங்களை எளிதாக இணையத்தில் காணலாம். ஸ்கிரீன் ஷாட்களைப் பயன்படுத்தி ஷாப்பிங் பரிந்துரைகளை வழங்கும்போது (செயலிக்கான லிங்க்-ஐ அனுப்புவது நிச்சயம் அதிக அர்த்தத்தைத் தருகிறது என்றாலும்) அல்லது ஆன்லைனில் படித்த சுவாரஸ்யமான கட்டுரையை ஸ்கிரீன் கிராப் செய்து அனுப்பும் போது இது மிகவும் எளிதானதாக இருக்கும். (லிங்க்-ஐ சேமிப்பதை விட படங்களை சேமிப்பது எளிது!)

வேலை செய்யுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
இந்த அம்சம் கூகுள் தேடல் செயலியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களுக்கு மட்டுமா அல்லது வேறு எந்த ஸ்கிரீன் ஷாட்களுக்கும் வேலை செய்யுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த அம்சம் இறுதி பதிப்பில் வெளி வருமா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. ஆனால் இது ஒரு சுவாரஸ்யமான அம்சமாக இருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications