கூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..

பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இத்திட்டம், 8 முதல் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டவுள்ளது.

|

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் பிரிவுகளில் பணியாற்றிவரும் இந்திய ஸ்டார்ட்அப்களை வளர்த்தெடுக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் ' லாஞ்ச்பேட் ஆக்ஸிலரேட்டர்' என்னும் வழிகாட்டும் திட்டத்தின் இந்திய பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்:ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்

மூன்று மாதகால திட்டமான இந்த லாஞ்ச்பேட் ஆக்ஸிலரேட்டர் இந்தியா திட்டம், இந்தியாவின் தனித்துவ பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்கும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு உதவி ஏஐ/எம்எல் எகோ சிஸ்டத்தை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இத்திட்டம், 8 முதல் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டவுள்ளது.மேலும் கூகுளின் சிறந்த ஏஐ/எம்எல், கிளவுட்,யூஎக்ஸ், ஆண்ராய்டு, வெப், ப்ராடக்ட் ஸ்ட்ரேடஜி மற்றும் மார்க்கெட்டிங் போன்றவற்றில் உதவிகரமாக இருப்பதுடன், 1,00,000 டாலர்(ரூ69 லட்சம்)வரை கூகுள் கிளவுட் கிரிடிட்ஸ் உதவியும் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


" எதிர்காலத்திற்கான தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் இந்தியாவில் இருக்கிறது . இந்தியாவின் தேவைகளை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யும் இந்திய தொழில்முனைவோருக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கும் திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்" என்கிறார் குளோபல் லாஞ்ச்பேட் நிறுவனர் க்லாஸ்பெர்க்.

கூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்:ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்

விவசாய தொழில்நுட்பத்திலிருந்து, மொழி இணையம், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில், ஏஐ/எம்எல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் இந்தியா முழுவதும் உள்ள சில நம்பமுடியாத அளவிற்கு சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியதாக கூகுள் கூறியுள்ளது.

"இந்தியாவிற்கு மட்டுமான இந்த லாஞ்ச்பேட் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தின் மூலம், ஸ்டார்ட்அப் மற்றும் இன்டஸ்ட்ரி எகோ சிஸ்டம் இடையே பாலம் அமைத்து,இந்திய சந்தையில் புதுமையை புகுத்த உதவமுடியும்" என மேலும் கூறுகிறார் க்லாஸ்பெர்க்.


முதல் வகுப்பிற்கான விண்ணப்பத்தை ஜூலை31 வரை சமர்பிக்கலாம் எனவும், முதல் வகுப்பு செப்டம்பர் 2018ல் துவங்கும்.

வளர்ந்துவரும் ஸ்டார்ட்அப்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கூகுள் இந்தியா நிறுவனம் ' சால்வ் ஃபார் இந்தியா' என்னும் திட்டத்தின் கீழ் முதல் 10 இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு 4 நாள் பூட் கேம்ப்-ஐ நடத்தியது. இந்த கேம்ப்ல் ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனும் தனித்தனியாக கூகுளின் வல்லுநர்கள் மற்றும் துறை வழிகாட்டிகள் , சவால்மிக்க பொருட்கள் மற்றும் வளர்ச்சி சவால்களுக்கு தீர்வுகாண கலந்தாலோசிக்கப்பட்டது.

"இந்தியா முழுவதும் 15 நகரங்களுக்கு சென்று, 160 உள்நாட்டு ஸ்டார்ட்அப்களில் 10 நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கான சிறப்பு திட்டத்தில் சேர்ந்து பயணிக்கவுள்ளன"என்கிறார் கூகுள் இந்தியா நிறுவனத்தின் அலுவலர் கார்த்திக் பத்மநாபன்.

கூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்:ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்

நெபுலா, ஸ்லேங் லேப், ப்ரெக்பட்ஃடி, லீகல்டெஸ்க், பேசாக், வோகல், பார்மார்ட், மெசோ, பிரதிப்பிலி மற்றும் எம்-இன்டிகேட்டர் போன்ற ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள் இதன் பங்கேற்பாளர்கள் ஆவர். இந்த லாஞ்ச்பேட் ஆக்ஸிலரேட்டர் மூலம் உள்ளூர் சந்தைக்கு ஏற்ப சிறந்த பொருட்களை உருவாக்க ஸ்டார்ட்அப்களுக்கு உதவ முடியும் என்கிறது கூகுள்.

Best Mobiles in India

English summary
Google Launchpad Accelerator India Unveiled for AI, ML Startups in the Country : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X