கூகுள் லான்ச்பேட் ஏக்ஸிலரேட்டர் திட்டம்: 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு!
பெங்களூரில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 10 அன்று, தொடக்க வகுப்பு துவங்குகிறது.
இந்தியாவில் "லான்ச்பேட் ஏக்ஸிலரேட்டர்"வழிகாட்டல் திட்டத்திற்காக 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளியன்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 10 அன்று, தொடக்க வகுப்பு துவங்குகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இரண்டு வாரம் தீவிர வழிகாட்டி துவக்க முகாம் நடக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் மீதமுள்ள 3மாதகாலத்திற்கு, தனிப்பயனாக்கப்பட்ட மெய்நிகர் வழிகாட்டுதல்(customised virtual support ) வழங்கப் படும் எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேர்என்எக்ஸ்
"தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், விவசாயிகளுக்கான முடிவெடுக்கும் செயல்முறைக்கு துணைபுரிதல்,சாட்டிலைட் இமேஜ்னரியை பயன்படுத்துதல், ப்ளூகாலர் பணிபுரிவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பாதிக்கும் திறன்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் வியக்கத்தக்க பணிகளை செய்துவருகின்றன" என்கிறார் கூகுள் இந்தியா நிறுவனத்தின் திட்ட மேலாளர் ஃபால் ரவீந்திரநாத்.
இத்திட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான கேர்என்எக்ஸ்(CareNx), கரு மூச்சுத்திணறலை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் ஸ்மார்ட்போன் மூலம் இயங்கும் கரு இதய கண்காணிப்பு அமைப்பு(fetal heart monitor) ஆகும்.

வாஸ்ஸர் லேப்ஸ்
வாஸ்ஸர் லேப்ஸ்(Vassar Labs) நிறுவனம் சென்சார், சாட்டிலைட் மற்றும் மக்கள் வழங்கிய தரவுகளை பயன்படுத்தி தண்ணீர்,விவசாயம், கல்வி போன்ற துறைகளில் முடிவடுக்கும் சேவையை வழங்குகிறது.
வைஸா(Wysa) என்ற செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படும் சாட், மனநல தெரபி வழங்குகிறது.
மல்டிபாஸி(MultiBhashi) என்ற எளிமையாக்கப்பட்ட மொழி கற்கும் தளம், ப்ளூகாலர்பணிபுரிவோர் மற்றும் "நெக்ஸ்ட் பில்லியன் இந்தியன்" ஆன்லைன் பயனர்களுக்கானது.

ஜென்ரோபோடிக்ஸ்
"ஜென்ரோபோடிக்ஸ் என்ற சாக்கடை தூய்மை செய்யும் செமி ஆட்டோமேட்டேட் ரோபோட், இந்தியாவில் மனிதர் சாக்கடை தூய்மைசெய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க உருவாக்கப்பட்டது" என்கிறது கூகுள்.
ஆலிவ்வியர்(OliveWear) என்ற மருத்துவர்களுடன் இணைக்கப்பட்ட ஆரோக்கிய சுற்றுச்சூழல், கர்ப்பிணி பெண்களுக்கு தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை வழங்குகிறது.

சைன்ஸி
சைன்ஸி(Signzy) செயற்கை நுண்ணறிவு மற்றும் ப்ளாக்செயின் பயன்படுத்தி, ஸ்மார்ட் இ வெரிபிகேசன் மற்றும் ரிஸ்க் பிரிடிக்சன் செய்ய பயன்படுகிறது.
ஸ்லேங்லேப்ஸ்(SlangLabs) என்ற மென்பொருள் தளம், மொபைல் செயலிகளுக்கு பலமொழி குரல் இடைமுகத்தை கட்டமைக்க உதவுகிறது. இதன் மூலம் தொடுதலுடன் கூடுதலாக குரல் வாயிலாகவும் ஊடாட முடியும்.
டென்3ஹெல்த்கேர்(ten3THealthcare) என்பது நோயாளிகளின் முக்கிய அறிகுறிகளை நிகழ்நேரத்தில், தொலைதூரத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து, தடுக்கக்கூடிய மருத்துவ தீங்கு நிகழ்வுகள் முன்கூட்டியே கண்டறிகிறது.

அன்கேனி விஷன்
அன்கேனி விஷன் (Uncanny Vision), செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ,வாகனம், மக்கள் மற்றும் பொருட்களை ஆராய்கிறது.
"எங்களது இந்த திட்டத்தின் மூலம், திறன், தளம், கருவிகள் மற்றும் மெஷின்லேர்னிங், ஏஐ உள்ளிட்ட முக்கிய பலங்கள் போன்ற கூகுளின் சிறப்பான விசயங்களை வெளிப்படுத்தி, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சியடைய உதவமுடியும் என நம்புகிறோம்" என்கிறார் ரவீந்திரநாத்.
கூகுளின் சர்வதேச லான்ச்பேட் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தின் அடிப்படையில், இந்திய லான்ச்பேட் ஆக்ஸிலரேட்டர் கடந்த ஜூலை மாதம் முதல் விண்ணப்பங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications