எமர்ஜென்சியா பயன்படுத்திக் கொள்ளுங்கள் - கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ்..!
நீர் தேங்கி நிற்கும் சாலைகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகள் என போராடும் சென்னை மக்களுக்காக கூகுள் நிறுவனம் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் என்ற ஒன்றை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

நெருக்கடியான நேரத்தில் பதில் தரும் கருவியான க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் (Crisis Response tool) இதன் மூலம் ஃபேஸ்புக்கை போலவே கூகுள் நிறுவனமும் சென்னைக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இந்த க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூலுக்கு சவுத் இந்தியன் ஃப்லட்டிங் (South Indian Flooding) என்று பெயரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் டூல் மூலம் அவசர கால தொலைப்பேசி எண்கள், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளின் மேப்கள் மற்றும் பிற முக்கியமான எமர்ஜென்சி தகவல்களை பெற முடியும்.மேலும் இதன் மூலம் மிக முக்கியமான ட்வீட்கள், உடனுக்கு உடனான செய்திகள் மற்றும் சென்னை வெள்ளம் சார்ந்த வீடியோக்கள் ஆகியவைகளும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்..!
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications