Home
News

சைலண்டாக கூகுள் குரோமில் அறிமுகமானது புதிய வசதி.. இனிமேல் நீங்க தேடுவது அப்படியே மாறப் போகுது!

இந்தியா முழுவதும் பல கோடி மக்கள் கூகுள் குரோம் (Google Chrome) வெப் பிரவுசரை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த கூகுள் குரோமில் மிகச் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில் இந்த கூகுள் குரோம் தளம் ஆனது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் கூகுள் குரோம் பிரவுசரில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஜெமினி ஏஐ (Gemini AI) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் குரோம் பிரவுசரில் தேடும் தகவல்களைத் தாண்டி, பிரவுசருடனேயே உரையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

சைலண்டாக கூகுள் குரோமில் அறிமுகமானது புதிய வசதி.. இனிமேல் நீங்க தேடுவத

தற்போது டெஸ்க்டாப் பயனர்கள் குரோம் பிரவுசரின் வலது பக்கத்தில் ஒரு புதிய சைட்பார் (Sidebar) வசதியை பார்க்க முடியும். இதில் ஜெமினி ஏஐ உதவியாளர் எப்போதும் உங்களுக்காகக் காத்திருப்பார். நீங்கள் குரோம் தளத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பக்கத்தை விட்டு வெளியேறாமல் ஜெமினியிடம் சந்தேகங்களைக் கேட்க முடியும். குறிப்பாக இது உங்களின் வேலை நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தேடலை எளிதாக்கும்.

அதேபோல் உங்களுக்குக் கூகுள் குரோம் தளத்தில் செய்திக் கட்டுரைகள் அல்லது Blog பதிப்புகளைப் படிக்க அதிக நேரமில்லை என்றால், உடனே குரோம் சைட்பாரில் உள்ள ஜெமினியிடம் Summarize என்று கேட்டால் போதும் அந்த பக்கத்தில் உள்ள முக்கிய தகவல்களை மட்டும் சில வரிகளில் உங்களுக்குத் தொகுத்து வழங்கிவிடும். இது மாணவர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பொதுவாக நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அல்லது ஒரு இடத்திற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும்போது, நாம் பல டேப்களை (Tabs) திறந்து வைத்திருப்போம். ஆனால் இனிமேல் அந்த சிரமம் இருக்காது. அதாவது கூகுள் குரோம் தளத்தில் உள்ள ஜெமினி AI உதவியுடன், வெவ்வேறு டேப்களில் உள்ள தகவல்களைச் சுலபமாக ஒரே இடத்தில் ஒப்பிடலாம். அதேபோல் இரண்டு வெவ்வேறு போன்களின் சிறப்பம்சங்களை ஒப்பிடச் சொன்னால் ஜெமினி ஒரு அட்டவணையாகப் போட்டுத் தந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் கூகுள் குரோம் தளத்தில் இந்தியப் பயனர்களுக்கு உள்ள முக்கியமான சிறப்பான அம்சம் என்னவென்றால், ஜெமினி ஏஐ தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் செயல்படும். எனவே ஆங்கிலம் தெரியாதவர்களும் தங்கள் தாய்மொழியிலேயே பிரவுசரிடம் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.

குறிப்பாக டெஸ்க்டாப் மட்டுமின்றி ஜபோன் (ஐஒஎஸ்) பயனர்களுக்கும் குரோமில் இந்த ஜெமினி வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றுடன் இது இணைந்து செயல்படும். அதுவும் இந்த வசதி மூலம் குரோம் பக்கத்தில் இருந்தே மின்னஞ்சல்களை எழுதவும், யூடியூப் வீடியோக்களின் சுருக்கத்தைப் பெறவும் முடியும் என்று கூறப்படுகிறது.

சைலண்டாக கூகுள் குரோமில் அறிமுகமானது புதிய வசதி.. இனிமேல் நீங்க தேடுவத

மேலும் இப்போது கூகுள் மேப்ஸில் புதிய Immersive Navigation என்ற அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் மேப்ஸ் இப்போது அருகிலுள்ள கட்டிடங்கள், மேம்பாலங்கள் (overpasses) மற்றும் நிலப்பரப்பை (terrain) காட்டும் 3D காட்சியை வழங்குகிறது. இது ஆப்பிள் மேப்ஸ் போன்ற அனுபவத்தை வழங்கும்.

Immersive Navigation அம்சம் தற்போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Launches Gemini AI in Chrome for India With Powerful New Tools: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X