இன்டெர்நெட்டில் இந்திய மொழிகள் - கூகுளின் புதிய திட்டம் இன்று துவங்கியது

Written By:

கூகுள் வாடிக்கையாளர்களை இந்தியாவில் அதிகரிக்க "இந்திய மொழிகள் இன்டெர்நெட் உடன்பாடு" என்ற அமைப்பை இன்று துவக்கி வைத்தது கூகுள். இன்டெர்நெட்டில் இந்திய மொழிகளை வளர்க்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இன்டெர்நெட்டில் இந்திய மொழிகள் - கூகுள் புதிய திட்டம்

இது தொடர்பாக இன்று நடந்த விழாவில் இந்தி வாய்ஸ் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் 500 மில்லியன் இன்டெர்நெட் பயனாளிகளை பெற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் இன்டெர்நெட் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூகுள் இந்தியா தலைவர் எம்டி ராஜன் ஆனந்தன் தெரிவித்தார், தற்சமயம் நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் பயனாளிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்த தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ப்ராகாஷ் ஜவதேக்கர் இந்நிகழ்வு இந்தியாவின் தொழில்நுட்ப போக்கை மாற்றும் என்பதில் சந்தேகம் இருக்காது, இந்தியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை வரவேற்கின்றனர் என்றும் தெரிவித்தார். இவ்விழாவில் கூகுளின் மூத்த தலைவர் அமித் சிங்கள் மற்றும் ஒன் இந்தியா இணையதளத்தின் நிறுவனர் திரு. பிஜி. மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டர்.

Read more about:
English summary
Google Launches Alliance to Promote Indian languages on Web. Here you will find Google's new Alliance.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot