சரியான முடிவு: வேலை தேடுபவரா நீங்கள்- கூகுள் அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்!
கொரோனா காலத்தில் வேலையிழந்த தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் கோர்மோ என்ற செயலியை இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்கள் அப்லோட் செய்யும் ரெஸ்யூம்கள்
பயனர்கள் அப்லோட் செய்யும் ரெஸ்யூம்கள்(சுயவிவரம்) அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான வேலையை கண்டறிந்து அதற்கு விண்ணப்பிக்க உதவும் வகையில் கூகுள் கார்மோ ஜாப்ஸ் பயன்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கோர்மோ ஜாப்ஸ்
கோர்மோ ஜாப்ஸ் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் தொடங்கப்பட்டது. பயனர்கள் டிஜிட்டல் ரெஸ்யூம்களை உருவாக்கி அதன் மூலம் அப்ளை செய்ய கூகுள் பயன்பாடு உதவுகிறது. அதேபோல் இந்த செயலி 2019 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

தேடுபொறி மூலம் வேலை தேடுபவர்களுக்கு உதவி
கூகுள் முன்னதாகவே இந்தியாவில் தனது தேடுபொறி மூலம் வேலை தேடுபவர்களுக்கு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்தாண்டு கூகுள் பே மூலம் நிறுவனம் வேலை அம்சம் ஒன்றை உருவாக்கியது. இந்த நிலையில் கூகுள் வேலை விண்ணப்ப பட்டியல் ரீதியிலான கோர்மோ ஜாப்ஸ் பயன்பாட்டை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வேலை வாய்ப்பு பட்டியல்
கோர்மோ ஜாப்ஸ் பயன்பாடு வேலை வாய்ப்புகளை பட்டியலிடுகிறது, இந்த பயன்பாட்டில் சொந்த சிவி(சுயவிவரப்பட்டியல், ரெஸ்யூம்) உருவாக்க அனுமதிக்கிறது. கூகுளின் இந்த அறிமுகம் லிங்க்ட் இன், நவுக்ரி, டைம்ஸ் ஜாப்ஸ் ஆகியவைகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை காலியிடங்களை காண்பிக்கும்
கோர்மோ ஜாப்ய் செயலி மூலம் பயனர்கள் பதிவிடும் சுயவிவரத்தின் அடிப்படையில் வேலை காலியிடங்கள் குறித்து காண்பிக்கிறது. கூகுள் கோர்மோ பயனர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புதிய திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஜாப்ஸ்பாட் அம்சம்
முன்னதாக கூகுள் பே மூலம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜாப்ஸ்பாட் அம்சம் பயனர்களின் வேலை தேடலை பூர்த்தி செய்தது, இந்த பயன்பாட்டின் மூலம் டன்சோ மற்றும் சொமாட்டோ 20 மில்லியனுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை பதிவு செய்ய முடிந்தது.

கொரோனா காலத்தில் வேலைதேடுபவர்களுக்கு உதவும்
கூகுள் என்ற தனித்துவத்தின் மூலம் இந்த ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் வேலையிழந்து தவிக்கும் பலருக்கும் இந்த செயலி பல்வேறு வகையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications